பூரணபோளி (Poorna Poli Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மைதா மாவில் 3 டீஸ்பூன் எண்ணெய், அரை டீஸ்பூன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவை விட சற்று தளர்ச்சியாக பிசைந்து வைக்கவும்.
- 2
இந்த மாவின் மேல் 3 டீஸ்பூன் எண்ணெய் தடவி அரை மணி நேரம் மூடி வைக்கவும்.
- 3
இந்த நேரத்தில் பூரணத்தை நாம் தயார் செய்து கொள்ளலாம்.
- 4
ஒரு மணி நேரம் ஊற வைத்த கடலைப் பருப்பை குக்கரில் விசில் வந்த பிறகு சிறிய தீயில் வைத்து 2 நிமிடங்கள் வேகவைத்து கொள்ளவும்.
- 5
வேகவைத்த பருப்பை நன்றாக ஆற வைத்து தண்ணீரை வடிகட்டி மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்
- 6
அரைத்த கடலைப்பருப்புடன் தூள் செய்த வெல்லத்தை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
- 7
இதை ஒரு வாணலியில் சேர்த்து நன்றாக கெட்டி பதம் வரும் வரை கிளறிக் கொள்ளவும்.
- 8
இந்தப் பூரணத்தை உருண்டைகளாக பிடித்து தயார் செய்து கொள்ளவும்.
- 9
மைதா மாவை சிறு உருண்டையாக எடுத்து ஒரு வாழையிலையில் எண்ணெய் தடவி அதன் மேல் இந்த உருண்டையை வைத்து நன்றாக வட்டமாக தட்டிக் கொள்ளவும்.
- 10
அதன் நடுவில் பூரணத்தை வைத்து மூடவும்
- 11
மூடிய பகுதியை அடி பக்கமாக வைத்து வாழை இலையின் மேல் வைத்து நன்றாக தட்டிக் கொள்ளவும்
- 12
தோசைக்கல்லில் நெய் தடவி அதன் மேல் இந்த போளியை போட்டு இரண்டு பக்கமும் நன்றாக சிவக்கும் வரை சுட்டு எடுக்கவும்.
- 13
சூடாக இருக்கும்போதே இரண்டு பக்கமும் நெய் தடவவும்.
Keywords
Similar Recipes
More Recipes










கமெண்ட்