காலிஃப்ளவர் முட்டை மசாலா (Cauliflower Muttai MAsala Recipe in Tamil)

Shamee S @cook_19454836
காலிஃப்ளவர் முட்டை மசாலா (Cauliflower Muttai MAsala Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
காலிஃப்ளவரை சிறு பூக்களாக பிரித்துக் கொள்ளவும். அதனை உப்பு கலந்த சுடுநீரில் 10 நிமிடம் போட்டு வடிகட்டி வைக்கவும். பூச்சி எதுவும் இருந்தால் வந்து விடும்.
- 2
வெங்காயம், தக்காளியை மெல்லியதாக அரிந்து கொள்ளவும். மிளகாயை நடுவில் கீறி வைக்கவும். பானில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், தக்காளி, மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 3
வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
- 4
பின்னர் காலிஃப்ளவர், தூள் வகைகள், உப்பு சேர்த்து பிரட்டி விட்டு 1/2 கப் தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
- 5
காலிஃப்ளவர் வெந்ததும் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கொத்தி விடவும்.
- 6
முட்டை வெந்ததும் அடுப்பை அணைத்து மல்லிதழை தூவி பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11111304














கமெண்ட்