மீன் பொடிமாஸ் (Meen Podimass Recipe in Tamil)

evanjalin
evanjalin @cook_19140001

மீன் பொடிமாஸ் (Meen Podimass Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 200 கிராம்மீன்
  2. 1 தேக்கரண்டிதுருவிய இஞ்சி
  3. 1 தேக்கரண்டிபூண்டு-(பொடியாக நறுக்கியது)
  4. 2பச்சை மிளகாய்
  5. சிறிதளவுகறிவேப்பிலை‌
  6. 15-20சின்ன வெங்காயம்
  7. 1தக்காளி
  8. 1 /4 தேக்கரண்டிமஞ்சள் தூள்-
  9. 1 மேசைக்கரண்டிமிளகாய்த்தூள்
  10. 1/2 மேசைக்கரண்டிதனியா தூள்
  11. 1/2 தேக்கரண்டிசீரகத்தூள்
  12. 3/4 தேக்கரண்டிகரம் மசாலா தூள்
  13. 1/2 தேக்கரண்டிகடுகு
  14. தேவையான அளவுஉப்பு
  15. தேவைக்கேற்பதேங்காய் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    மீனை நன்கு சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

  2. 2

    ஒரு வாணலியில் தண்ணீர் சேர்த்து உப்பு மஞ்சள் தூள் சேர்த்து சுத்தம் செய்த மீனை வேக வைத்து கொள்ளவும்.

  3. 3

    மற்றொரு வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு சேர்த்து பொரிந்ததும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்

  4. 4

    பின்னர் அதில் நறுக்கிய பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி பொடியாக நறுக்கிய இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.

  5. 5

    பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.வதங்கியதும் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

  6. 6

    அதில் உப்பு சேர்த்து மிளகாய் தூள், தனியாத்தூள் சேர்த்து வதக்கவும் சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும்

  7. 7

    பின்னர் அதில் வேக வைத்து எடுத்த மீனை முள் நீக்கி பொடியாக நறுக்கி சேர்த்து நன்றாக வதக்கவும்

  8. 8

    வதங்கியதும் துருவிய தேங்காய் சேர்த்து சீரகத்தூள்,கரம் மசாலா தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்

  9. 9

    நன்றாக வதங்கியதும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.மீன் பொடிமாஸ் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
evanjalin
evanjalin @cook_19140001
அன்று

Similar Recipes