தயிர் ஓட்ஸ் (Thayir Oats Reicpe in Tamil)

Navas Banu
Navas Banu @cook_17950579

தயிர் ஓட்ஸ் (Thayir Oats Reicpe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2 கப்ஓட்ஸ்
  2. 10 டேபிள் ஸ்பூன்தயிர்
  3. 4 கப்தண்ணீர்
  4. 1 டேபிள் ஸ்பூன்தேங்காய்எண்ணெய்
  5. 1 டீஸ்பூன்கடுகு
  6. 1 டீஸ்பூன்கடலைப்பருப்பு
  7. 1 டீஸ்பூன்உளுந்தம் பருப்பு
  8. ஒரு துண்டுஇஞ்சி - (பொடியாக நறுக்கியது)
  9. 2பச்சை மிளகாய் - (பொடியாக நறுக்கியது)
  10. கொஞ்சம்கறிவேப்பிலை
  11. தேவைக்குஉப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு கடாய் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்.

  2. 2

    பின்னர் இதில் இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

  3. 3

    இதனுடன் ஓட்ஸை சேர்த்து நன்றாக வதக்கவும்.ஒட்ஸ் வதங்கியதும் நான்கு கப் தண்ணீர் சேர்த்து தேவைக்கு உப்பும் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணி மூடி வைத்து வேக விடவும்.

  4. 4

    ஓட்ஸ் நன்றாக வெந்து தண்ணீர் வற்றி வரும் போது தயிரை சேர்த்து நன்றாகக் கிளறி இரண்டு நிமிடம் லோ ஃப்ளேமில் மூடி வைத்து இறக்கவும்.

  5. 5

    கேரட் துருவியதும்,மாதுளை விதைகளும் போட்டு அலங்கரித்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Navas Banu
Navas Banu @cook_17950579
அன்று

Similar Recipes