பாவ் பாஜி (paav bhaaji recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாவ் மசாலா செய்வதற்கு :காலிஃப்ளவர் -ஐ சுத்தம் செய்து கொள்ளவும். காலிஃப்ளவர், பச்சை பட்டாணி உருளைக் கிழங்கு இவற்றை குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும்.
- 2
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
- 3
வெங்காயத்தாழ்,கொத்தமல்லிஇலை, புதினா, குடைமிளகாய்,சீரககீரை, இவற்றை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
- 4
வாணலியை அடுப்பில் வைத்து பட்டர் சேர்க்கவும். நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
- 5
மஞ்சள் தூள் பாவ் மசாலா பொடி சேர்க்கவும்.இஞ்சி பூண்டு விழுது,தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 6
பொடியாக நறுக்கிய கொத்தமல்லிஇலை புதினா குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 7
நன்றாக வதங்கியதும் வேகவைத்த காலிஃப்ளவர் பட்டாணி உருளைக் கிழங்கு சேர்க்கவும். 1கப் தண்ணீர் சேர்க்கவும். உப்பு தேவைக்கேற்ப சேர்த்து கொள்ளவும்.
- 8
நன்றாக தண்ணீர் வற்றியதும் சுருள கிளறி விட்டு கொத்தமல்லிஇலை சேர்த்து இறக்கவும். பாவ் மசாலா தயார்.
- 9
பாவ் பாஜி செய்வதற்கு :அடுப்பில் தவா வைத்து பட்டர் சேர்க்கவும். மிளகாய் தூள், பாவ் மசாலா பொடி,புதினா இலை சேர்க்கவும்.
- 10
பன்னை இரண்டாக கீறிவிட்டு அதன் மேல் வைக்கவும். இரண்டு புறமும் திருப்பி விட்டு எடுக்கவும்.
- 11
பாவ் பாஜி தயார்.
Keywords
Similar Recipes
More Recipes




















கமெண்ட்