உளுந்து வடை (Ulunthu vadai Recipe in Tamil)

உளுந்து வடை பிடிக்காதவர்களே கிடையாது எனலாம் .சாம்பார், தேங்காய் சட்னி இருந்தால் ,சுட சுட சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம். உளுந்து உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் .பித்தத்தைக் குறைக்கும். குழந்தைகளின் வளர்ச்சியில் முக்கிய பங்குகெடுக்கும் .எலும்புகள் வலுப்பெறும் .

சமையல் குறிப்புகள்
- 1
1 கப் உளுந்து பருப்பு 1 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு சேர்த்து கழுவி 30 நிமிடம் ஊற விட்டு கிரைண்டரில் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து வைக்கவும்.
- 2
பெரிய வெங்காயம் 1 தோல் நீக்கி கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.அரைத்த உளுந்து மாவில் சீரகம் 1 டீஸ்பூன்,மிளகு 1 டீஸ்பூன்,பச்சை மிளகாய் 1 பெருங்காயம் சிறிது,உப்பு, கழுவி நறுக்கிய கொத்தமல்லி தழை கருவேப்பிலை கடைசியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து கலக்கி வைக்கவும்.
- 3
பெருங்காயம் சிறிது சேர்க்கவும்.கடாயில் ஆயில் 4 குழி கரண்டி விட்டு காய்ந்ததும் வடைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- 4
வடைகளை திருப்பி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.சுவையான உளுந்து வடை ரெடி.சாம்பார் சட்னியுடன் தொட்டு சாப்பிடலாம்.😋😋
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்