தேங்காய் பால் குருமா/ Kerala Vegetable Stew

ஆப்பத்திற்கு சிறந்த காம்பினேஷன்
தேங்காய் பால் குருமா/ Kerala Vegetable Stew
ஆப்பத்திற்கு சிறந்த காம்பினேஷன்
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை ஊற்றி பட்டை, லவங்கம்,ஏலக்காய் &பிரிஞ்சி இலை தாளித்து 2 பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம் சிறிது இஞ்சி பூண்டு வதக்கி கொள்ளவும்.
- 2
பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி & உருளைக்கிழங்கு இவை நான்கையும் அதில் சேர்த்து நன்கு வதக்கி, தேவைக்கேற்ப உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து, 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரில் இரண்டு விசில் விடவும்.
- 3
ஒரு ஒரு மூடி துருவிய தேங்காயை ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து பால் எடுத்து, அதை வடித்து பால் எடுத்துக் கொள்ளவும்.
- 4
விசில் அடங்கியதும் தேங்காய் பாலை அதனுடன் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க வைக்கவும்.அடுப்பை அணைத்து சிறிது பொடியாக அரிந்த கொத்தமல்லி இலை தூவி சூடாக ஆப்பம் சுட்டு பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes












கமெண்ட்