பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அனைத்து பொருள்களையும் ரூம் டெம்ப்ரேச்சரில் வைத்து கொள்ளவும்.
- 2
ஒரு பவுலில் மைதா மாவு, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், உப்பு, கோகோ பவுடர், இவற்றை சலித்து வைத்து கொள்ளவும்.கரண்டியால் கலந்து கொள்ளவும்.
- 3
மற்றொரு பாத்திரத்தில் முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து நன்றாக பிலண்டரில் நுரைப்பொங்க அடித்து எடுத்து கொள்ளவும்.
- 4
பின் மாவுக் கலவையில் முட்டையின் மஞ்சள் கரு,எண்ணெய் அல்லது பட்டர்,வெனிலா எசென்ஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 5
பேஸ்ட் போல் கட்டி இல்லாமல் செய்து கொள்ளவும்.பின் அடித்து வைத்துள்ள முட்டையின் வெள்ளைக்கருவையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 6
பின் அவற்றை கேக் ட்ரேயில் ஊற்றி சரிசமமாக படுத்தி கொள்ளவும்.
- 7
பின் ஓவனை 180°செல்சியஸ் 10 நிமிடம் வைத்து முன்சூடு செய்து கொள்ளவும்.
- 8
பின் கேக் ட்ரேயை உள்ளே வைத்து 30நிமிடம் வைத்து பேக் செய்து கொள்ளவும். பின் கேக் தயாரானதும் வெளியில் எடுத்து ஆறவிடவும்.
- 9
ஓவன் இல்லையென்றால் குக்கரில் வைக்கவும். குக்கரில் சிறிது மண் அல்லது கல்உப்பு சேர்த்து அவற்றில் வைத்து பேக் செய்யவும்.
- 10
குக்கரில் செய்யும் பொழுது ரப்பர் மற்றும் விசில் போடாமல் செய்ய வேண்டும். குக்கரில் செய்யும் பொழுது 30நிமிடம் வைத்து பேக் செய்யவும்.
- 11
க்ரீம் செய்வதற்கு முன் க்ரீம் செய்யும் பாத்திரத்தை ப்ரீசரில் வைத்து எடுத்து கொள்ளவும்.
- 12
க்ரீம் செய்வது :: விப்பிங் க்ரீமை ஒரு பவுலில் ஊற்றி பவுடர் சர்க்கரை சேர்த்து நன்றாக எலெக்ட்ரிக் பீட்டர் வைத்து அடித்து கொள்ளவும்.
- 13
சிறிது வெனிலா எசென்ஸ் சேர்த்து கொள்ளவும். திக்காக க்ரீம் வந்ததும் எடுத்து கேக்கில் தடவி மேலே சாக்லேட் தூவி விட்டு, செர்ரி பழம் வைக்கவும்.
- 14
பின் அவற்றை ஃப்ரிஜில் வைத்து எடுத்து பரிமாறவும். சுவையான பிளாக் ஃபாரஸ்ட் கேக் ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
- முருங்கைக்கீரை சட்னி (Murunkai keerai chutney recipe in tamil)
- மீல் மேக்கர் கிரேவி🍲🍲 (Meal maker gravy Recipe in Tamil)
- தேனும் தினையும் / Foxtail Ladoo (Thenum thinaiyum recipe in tamil)
- ஆட்டு ஈரல் வறுவல் (Aattu eral varuval recipe in tamil)
- சாமைஅரிசி தேங்காய் பால்பர்பி (Saamai arisi thenkaai paal burfi recipe in tamil)




கமெண்ட் (2)