பாசி பருப்பு உருண்டை (Paasi paruppu urundai recipe in tamil)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

பச்சை பயறு பருப்பு தான் பாசி பருப்பு என்று அழைக்கப்படுகிறது. இது உடல் பருமனை குறைக்கவும், எடையை சீராக வைக்கவும் உதவும். இரும்பு சத்து அதிகமாக உள்ளது.
#arusuvai 1
#nutrient 3

பாசி பருப்பு உருண்டை (Paasi paruppu urundai recipe in tamil)

பச்சை பயறு பருப்பு தான் பாசி பருப்பு என்று அழைக்கப்படுகிறது. இது உடல் பருமனை குறைக்கவும், எடையை சீராக வைக்கவும் உதவும். இரும்பு சத்து அதிகமாக உள்ளது.
#arusuvai 1
#nutrient 3

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரைமணி நேரம்
பத்து பேர்,  தலைக்கு ஒன்று விகிதம்.
  1. 1கப் வறுத்து பொடித்த பாசி பருப்பு பொடி
  2. 3/4கப் சர்க்கரை பொடித்தது
  3. 1/4கப் நெய்
  4. 1டேபிள் ஸ்பூன் முந்திரி, திராட்சை
  5. ஒரு சிட்டிகை ஏலக்காய் பொடி

சமையல் குறிப்புகள்

அரைமணி நேரம்
  1. 1

    முதலில் வாணலியை சூடு செய்து பாசி பருப்பை சிவக்க வறுத்து, சூடேறியவுடன் மிக்ஸியில் நைசாக பொடித்துக்கொள்ளவும்.

  2. 2

    சர்க்கரையை பொடி செய்து கொள்ளவும். ஏலக்காய் பொடித்து வசிக்கவும்.

  3. 3

    ஒரு அகலமான பாத்திரத்தில் பாசி பருப்பு மாவு, பொடித்த சர்க்கரை, ஏலக்காய் பொடி, வெட்டிவைத்துள்ள முந்திரி சேர்த்து, நெய் சூடுசெய்து, சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கலந்து, திராட்சை வைத்து அழுத்தி, உருண்டைகளாக உருட்டவும்.

  4. 4

    இப்போது சுவையான பாசி பருப்பு உருண்டை சுவைக்கத்தயார்.

  5. 5

    சத்துக்கள் நிறைந்த பாசி பருப்பு உருண்டைகள் பெரியவர் முதல், குழந்தைகள் வரை அனைவரும் சாப்பிடலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes