மஸ்ரூம் பிரியாணி (Mushroom biryani recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் எண்ணெய்,நெய் ஊற்றி பட்டை,கிராம்பு,ஏலக்காய், பிரியாணி இலை,முந்திரி ஆகியவை நன்கு வதக்கவும்.
- 2
நன்கு வதங்கிய பிறகு நறுக்கிய பெரிய வெங்காயம் 2 பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் சற்று வதங்கிய பின்பு இஞ்சி பூண்டு விழுதை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.தக்காளி தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
- 3
தக்காளி நன்கு வதங்கிய பிறகு கொத்தமல்லி புதினா சேர்த்து நன்கு வதக்கவும். இவை நன்கு வதங்கிய பின்பு தயிர் ஊற்றி வதக்கவும்.
- 4
பிறகு பிரியாணி மசாலா, கரம் மசாலா சேர்த்து வதக்கவும். வெட்டி வைத்திருக்கும் மஷ்ரூமை போட்டு கிளறவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
- 5
தண்ணீர் கொதித்த பிறகு கழுவிய அரிசியை போட்டு 2 விசில் வரும் வரை வைத்திருக்கவும். விசில் இறங்கிய பின்பு எடுத்தால் சுவையான மஷ்ரூம் பிரியாணி தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13076659

















கமெண்ட் (3)