பட்டர் சிக்கன்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கிண்ணத்தில் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் பொடி 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள், மல்லி தூள், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.
- 2
அத்துடன் சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்றாக கலந்து ஊறவிடவும்.
- 3
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் சிக்கன் துண்டுகளைப் போட்டு 80% வேகவிட்டு எடுக்கவும்.
- 4
அதே வாணலியில் வெண்ணெய் சேர்த்து உருகியதும் பொடியாக நறுக்கிய வெங்காயம் தக்காளி,மிளகாய்த்தூள், கரம்மசாலா சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- 5
கூடவே தண்ணீர் சேர்த்து நன்றாக வெந்ததும் ஆற வைத்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- 6
அதே வாணலியில் வெண்ணெய் விட்டு உருகியதும் சீரகம் கிராம்பு சேர்த்து பொரிந்ததும் அரைத்து வைத்த விழுதை சேர்த்து கொதிக்க விடவும்.
- 7
கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மசாலா வேகவைக்கும் கிரேவி கொஞ்சம் கெட்டியானதும் வேகவைத்த சிக்கன் துண்டுகளை அதில் சேர்த்து ஐந்து நிமிடம் சமைக்கவும்
- 8
க்ரீம் சேர்த்து அலங்கரிக்கவும் பட்டர் சிக்கன் ரெடி ஆனதும் நான் சப்பாத்தி புரோட்டா சாப்பிடவும்
Keywords
Similar Recipes
More Recipes

















கமெண்ட் (7)