சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்
- 2
ஐந்து முட்டைகளை வேக வைத்து தோலுரித்து இரண்டாக கட் பண்ணி வைத்துக் கொள்ளவும்.
- 3
அடுப்பில் வாணலை வைத்து மூன்று ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணை சூடானதும் கால் ஸ்பூன் கடுகு, கால் ஸ்பூன் சோம்பு போட்டு தாளிக்கவும். பிறகு நறுக்கி வைத்த வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
- 4
வெங்காயம் வதங்கியதும் பொடிப்பொடியாக நறுக்கி வைத்த தக்காளி அதில் போட்டு நன்கு வதக்கவும். கால் ஸ்பூன் உப்பு போட்டு வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியவுடன் ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- 5
பிறகு அதில் ஒரு ஸ்பூன் மிளகாய் தூள்,இரண்டு ஸ்பூன் மல்லித் தூள், அரை ஸ்பூன் கரம் மசாலா,கால் ஸ்பூன் மஞ்சள்தூள் எல்லாத்தையும் போட்டு நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி சுருண்டு எண்ணை பிரிந்து கிரேவியாக வரும் வரை கொதிக்க விடவும்.
- 6
கொதித்து கிரேவியாக வந்தவுடன் அதில் வேக வைத்து நறுக்கி வைத்திருந்த முட்டை துண்டுகளை மசாலாவில் போட்டு பிரட்டவும்.
- 7
சுவையான முட்டை கிரேவி ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes



















கமெண்ட்