ராகி பெப்பர் இடியாப்பம்
#பெப்பர்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப் ராகி மாவு, கால் கப் அரிசி மாவுடன் சிட்டிகை உப்பு, ஒரு தேக்கரண்டி எண்ணெய், தேவையான அளவு வெந்நீர் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.
- 2
பிசைந்த மாவை இடியாப்ப அச்சில் வைத்து இடியாப்பமாக இட்லி தட்டில் பிழியவும்.
- 3
பிழிந்த இடியாப்பத்தை இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேக வைக்கவும்.
- 4
வெந்ததும் எடுத்து ஆறவைத்து உதிர்த்துக் கொள்ளவும்.
- 5
கடாயில் ஒரு மேசைக்கரண்டி நெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்தம் பருப்பு, முந்திரிப் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 6
மிளகுப் பொடி, தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். உதிர்த்து வைத்த ராகி இடியாப்பம் சேர்த்துக் கிளறி இறக்கவும். சூடாகப் பரிமாறவும். தொட்டுக் கொள்ள எதுவும் தேவையில்லை. நெய் மணமும், மிளகின் காரமும் சுண்டி இழுக்கும்.
- 7
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13321791
















கமெண்ட் (2)