சக்கா பாயசம் (Sakka payasam recipe in tamil)

சக்கா பாயசம் ஒணம் சத்யா ரெஸிபி. பலாப்பழ சுளைகள், வெல்லம், தேங்காய் பால், ஏலக்காய் பொடி, குங்குமப்பூ சேர்ந்த சுவையான இனிப்பான சத்தான பாயாசம். கூட நெய்யில் வறுத்த முந்திரி. உலர்ந்த திராட்சை விட்டமின் c அதிகம். வெள்ளிக்கிழமை நெய்வேத்தியத்திர்க்காக பாயசம் செய்வேன். இன்று சக்கா பாயசம் செய்தேன். #kerala #photo

சமையல் குறிப்புகள்
- 1
செக்கலிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை சேகரிக்க, சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க.
- 2
மிதமான நெருப்பின் மேல், ஒரு அடி கனமான பாத்திரத்தில் 1 கப் நீருடன் வெல்லம் சேர்த்து கொதிக்க வைக்க. சிறிது கெட்டியான சிரப் செய்க.
மிதமான நெருப்பின் மேல், ஒரு சாஸ் பேனில் மீதி நெய்யில் முந்திரி திராட்சை வறுக்க, முந்திரி சிவக்கட்டும். திராட்சை உப்பும். அடுப்பை அணைக்க.
தேங்காய் துண்டுகள் கூட 2 கப் நீர் சேர்த்து மிக்ஸியில் அறைக்க. கெட்டியான முதல் பாலை வடித்து தனியாக ஒரு கிண்ணத்தில் வைக்க.
மீதி தேங்காய் சக்கையுடன் 2 கப் நீர் சேர்த்து அரைத்து வடிக்கட்டி 2 ம் பாலை எடுத்துக்கொள்ளுங்கள் - 3
பலாப்பழ சுளைகளை சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளுங்கள்.ஒரு கிண்ணத்தில் ½ கப் நீருடன் சேர்த்து குக்கரில் வேகவைக்க., ஆறின பின் மிக்ஸியில் அறைத்து பேஸ்ட் செய்க
மிதமான நெருப்பின் மேல், ஒரு அடி கனமான பாத்திரத்தில் 2 மேஜைகரண்டி நெய், பழ பேஸ்ட், 1 கப் நீர் சேர்த்து 4 நிமிடங்கள் வேகவைக்க. - 4
வெல்ல சிரப் சேர்த்து கிளற-4 நிமிடங்கள்..உப்பு சேர்க்க நெருப்பை குறைக்க. 2 ம் பாலை சேர்த்து கிளறி கொதிக்க வைக்க—மேலும் 4 நிமிடங்கள். ஏலக்காய். குங்குமப்பூ சேர்த்து கிளற. கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். சிறிது கெட்டியாகட்டும். கெட்டியான முதல் பாலை ஊற்றி கிளறி 2 நிமிடங்கள் பின் அடுப்பை அணைக்க.
- 5
வறுத்த முந்திரி திராட்சை சேர்க்க, சக்கா பாயாசம் தயார் ருசி பார்க்க. இனிப்பு அதிகம் வேண்டுமானால் சாப்பிடும் பொழுது தேன் சேர்த்துக்க.
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட் (3)