நெய் மீன் கருவாடு தொக்கு (Nei meen karuvadu thokku recipe in tamil)

நெய் மீன் கருவாடு தொக்கு (Nei meen karuvadu thokku recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கருவாடை அலசி எடுத்துக் கொள்ளவும். அதில் ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் சிறிதளவு மஞ்சள்தூள் சேர்த்து பிசறி ஊற வைக்கவும்.
- 2
சின்ன வெங்காயம் தக்காளி பூண்டு பச்சைமிளகாயை நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
- 3
பின்பு மண் சட்டி காய்ந்தவுடன் நல்லெண்ணெய் ஊற்றி சோம்பை பொரிய விடவும். பின் நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்க்கவும்.
- 4
5 நிமிடம் வதக்கிய பின் நறுக்கிய பச்சை மிளகாய் பூண்டு சேர்த்து கிளறவும். 5 நிமிடம் வதக்கி விடவும். தக்காளி சேர்த்து 10 நிமிடம் வதக்கவும்.
- 5
தக்காளி மைய வதங்கிய பின் ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்க்கவும் சிறிது மஞ்சள் தூளும் சேர்த்து தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும். நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இப்பொழுது ஊறவைத்த கருவாடை சேர்க்கவும்.
- 6
கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி விடவும். கருவாடு நன்கு வெந்து வரும் வரை வதக்கி விடவும்.
- 7
பின்பு சாதத்துடன் பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
- ஆந்திரா சாதப் பருப்பு பொடி(Andhra Rice Dhal Powder recipe in Tamil)
- ஆந்திரா வத்த குழம்பு (Andhra vathakulambu recipe in tamil)
- ஆலூ பாலக் பராத்தா (Aloo palak paratha recipe in tamil)
- கும்மிடிகாய பப்பு கூற (Gummidikaya pappu kura recipe in tamil)
- ஆந்திரா ஸ்டைல் துவரம் பருப்பு பொடி (Andhra style thuvaram paruppu podi recipe in tamil)



















கமெண்ட் (2)