வாழைத்தண்டு ஊத்தப்பம்

#GA4
வாழைத்தண்டு ஊத்தப்பம் எண்ணுடைய சொந்த படைப்பில் உருவாக்கப்பட்ட ஒரு உணவு. ஆரோக்கியமான அதே நேரத்தில் வித்தியாசமான ஊத்தப்பம் செய்ய வேண்டும் என யோசித்த போது இந்த பதார்த்தம் உருவானது. வாழைத்தண்டு உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால் குழந்தைகள் உண்ண மறுப்பார்கள். இந்த வாழைத்தண்டு ஊத்தப்பம் செய்து கொடுத்தால் வாழைத்தண்டு இருப்பது தொரியாமலே சாப்பிடுவார்கள்.நீங்களும் இந்த ஊத்தப்பம் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்
- 1
வாழைத்தண்டை நார் எடுத்து மிகச்சிறிய அளவில் நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்
- 2
கடாயில் சிறிது நெய் சேர்த்து நறுக்கிய வாழைத்தண்டை நன்றாக பிழிந்து விட்டு தண்ணீர் சத்து வற்றும் வரை வதக்கவும்
- 3
வதக்கிய வாழைத்தண்டை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 4
தோசை கல்லில் எண்ணெய் அல்லது நெய் தடவி கணமாக தோசையாக ஊற்றி அதன் மீது கலந்து வைத்த வாழைத்தண்டு கலவையை தூவவும்
- 5
அதன் மீது தேவையான அளவு நெய் மற்றும் இட்லி பொடி தூவி கொள்ளவும்
- 6
நன்றாக வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு வேக விடவும்
- 7
மறுபக்கம் திருப்பி போட்டு லேசாக அழுத்தி விடவும். இரண்டு பக்கமும் நன்றாக வெந்ததும் தட்டில் மாற்றி கொள்ளவும்
- 8
ஆரோக்கியமான சுவையான வாழைத்தண்டு ஊத்தப்பம் தயார்
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்