பஞ்சாபி உருளை கறி

Saritha Srinivasan @cook_24926694
பஞ்சாபி உருளை கறி
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்க்கவும், வெடித்தவுடன் கடலைமாவு சேர்த்து வதக்கவும், பின்னர் இஞ்சி சேர்க்கவும்.
- 2
வதங்கவும் கருவேப்பிலை, பச்சைமிளகாய் சேர்க்கவும். தக்காளியை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
- 3
தக்காளி விழுதை குக்கரில் சேர்த்து, மிளகாய் பொடி, மல்லி பொடி, மஞ்சள்தூள், உப்பு, அம்சுர் பவுடர் சேர்த்து நன்றாக கிளறவும்.
- 4
இப்போது தோல் சீவிய உருளைகிழங்கை சேர்த்து தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 3 விசில் வைக்கவும்
- 5
மூடியை திறந்து கரம்மசாலா, கொத்தமல்லி தூவி கிளறி 5 நிமிடங்கள் கொதிக்க வைத்தால் சுவையான பஞ்சாபி உருளை கறி தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13672447

















கமெண்ட்