க்ரீம் சீஸ் கேக் &சேர் பிஸ்கட்(Cream cheese cake,chair biscuit recipe in tamil)
#cookwithmilk
பாலில் இருந்து எப்படி கிரீம் சீஸ் தயார் செய்வது என்பதையும் அந்த க்ரீம்களை பயன்படுத்தி எப்படி கேக் மற்றும் சார் வடிவத்தில் பிஸ்கட்டை அலங்கரிப்பது என்பதையும் பார்க்கலாம். இதற்கு அடுப்பு பயன்படுத்த தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாலை நன்றாகக் காய்ச்சி நன்றாக கொதிக்கும் நேரத்தில் அதனுடன் எலுமிச்சம் பழ ஜூஸ் அல்லது வினிகர் சேர்த்து திரியவிடவும்
- 2
படத்தில் காட்டியுள்ளது போல இருக்கும்
- 3
பின்னர் அந்த பன்னீரை வடி தட்டு வைத்து வடிகட்டி பிறகு அந்த பன்னீரை மிக்சி ஜாரில் போட்டு அரைக்கவும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம் நல்ல பேஸ்ட் பதத்திற்கு அரைக்கவும். இதுதான் நம்முடைய க்ரீம் சீஸ்
- 4
பிறகு அதனுடன் ஆரஞ்ச் ஜூஸ் அல்லது ஆரஞ்ச் கிரஸ் சேர்த்து அரைக்கவும். நம்முடைய ஆரஞ்சு க்ரீம் சீஸ் தயார்
- 5
மிக்ஸி ஜாரில் 4 முதல் 5 பிஸ்கட் துண்டுகளை போட்டு நன்றாக அரைக்கவும் அந்த பொடியை நாம் பரிமாறும் கண்ணாடி டம்ளர் அல்லது பாத்திரத்தில் கீழே ஒரு லேயர் அமைக்கவும்
- 6
பிறகு நாம் தயார் செய்து வைத்திருக்கும் ஆரஞ்ச் க்ரீம் சீஸ் அடுத்த லேயராக அமைக்கவும்
- 7
பின்னர் கடைசியில் ஆரஞ்சு ஜூஸ் அல்லது ஆரஞ்சு க்ரஷ் சேர்த்து முடிக்கவும். நம்முடைய சுவையான க்ரீம் சீஸ் கேக் தயார். இதை பிரிட்ஜில் 3 முதல் 4 மணி நேரம் வரை வைத்து சாப்பிடவும்
- 8
இரண்டு பிஸ்கட் துண்டுகளை சேர் வடிவத்தில் வைத்து அதனை ஒட்டுவதற்கு க்ரீம் சீஸை பயன்படுத்தவும். க்ரீம் சீஸ் வைத்து இரண்டு நிமிடங்கள் பிடித்துக் கொண்டால் அது நன்றாக ஒட்டிக் கொள்ளும்
- 9
நம்முடைய சேர் பிஸ்கட் மற்றும் க்ரீம் சீஸ் கேக் தயார் இதை உங்களுடைய கற்பனை திறனுக்கு தகுந்தாற்போல செய்யலாம்
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட் (2)