குதிரைவாலி அரிசி புட்டு (Kuthiraivaali arisi puttu recipe in tamil)

#millet
குதிரைவாலி அரிசி புட்டு மிகவும் சுவையாக இருக்கும். முயற்சி செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்
குதிரைவாலி அரிசி புட்டு (Kuthiraivaali arisi puttu recipe in tamil)
#millet
குதிரைவாலி அரிசி புட்டு மிகவும் சுவையாக இருக்கும். முயற்சி செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்
சமையல் குறிப்புகள்
- 1
குதிரைவாலி அரிசியை 1 மணி நேரம் ஊற வைத்து பின் துணியில் ஈரம் போக காய வைத்து கொள்ளவும்
- 2
லேசான ஈரத்துடன் அரைக்கும் ஜாடியில் போட்டு ஏலக்காயும் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்
- 3
அரைத்த மாவை பாத்திரத்தில் கொட்டி உப்பு சேர்த்து தேவைபட்டால் சிறிது தண்ணீர் தெளித்து கலந்து கொள்ளவும்
- 4
கைகளால் இருக்க பிடித்து பின் உதிர்த்தால் மாவாக வர வேண்டும். மேலும் உங்கள் கைகளில் மாவின் ஈர பதத்தை உணர வேண்டும்
- 5
இட்லி தட்டில் வைத்து 10 -15,நிமிடம் வேக விடவும்
- 6
10 நிமிடம் கழித்து மாவை விரல்களால் பிடித்தால் ஒட்டாமல் வர வேண்டும்
- 7
தட்டில் கொட்டி சீனி அல்லது நாட்டு சர்க்கரை, தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கிளறி பரிமாறவும்
- 8
ஆரோக்கியமான குதிரைவாலி அரிசி புட்டு தயார்
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்