ரவா கிச்சடி (Rava khichadi recipe in tamil)

Poongothai N @cook_25708696
ரவா கிச்சடி (Rava khichadi recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெங்காயத்தையும் கேரட்டையும் பொடிதாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்
- 2
வெறும் வாணலியில் ரவையை பொன்னிறமாக வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்
- 3
பின்னர் அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து கறிவேப்பிலை மிளகாய் சேர்த்து பிறகு வெங்காயம் கேரட்டை சேர்த்து வதக்கவும்
- 4
வெங்காயம் மற்றும் கேரட் நன்றாக வதங்கியவுடன் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு மற்றும் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்
- 5
நன்றாக கொதி வந்தவுடன் வறுத்து வைத்திருக்கும் ரவையை சிறிது சிறிதாக கிளறிக்கொண்டே சேர்த்து நன்றாக கிளறவும். நன்றாக கெட்டியாகும் வரை கிளறவும் தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து கிளறலாம். நம்முடைய கிச்சடி தயார்
- 6
கிச்சடியை தேங்காய்ச் சட்னியுடன் பறிமாறலாம்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13954622
















கமெண்ட்