பாரம்பரியமான மோர்க்குழம்பு (Morkulambu recipe in tamil)

கோல்டன் ஆப்ரன் இந்த வார போட்டியில் கண்டுபிடித்த வார்த்தை பட்டர் மில்க் அதை சார்ந்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன் வாங்க செய்முறையை காணலாம்.#GA4
பாரம்பரியமான மோர்க்குழம்பு (Morkulambu recipe in tamil)
கோல்டன் ஆப்ரன் இந்த வார போட்டியில் கண்டுபிடித்த வார்த்தை பட்டர் மில்க் அதை சார்ந்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன் வாங்க செய்முறையை காணலாம்.#GA4
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் பொடியாக நறுக்கிய தேங்காயை சேர்த்துக் கொள்ளவும்.
- 2
தேங்காய் சேர்த்த பிறகு அதனுடன் நறுக்கிய பூண்டு பச்சைமிளகாயை சேர்க்கவும். அதனுடன் ஒரு ஸ்பூன் அளவு சீரகத்தூள் சேர்க்கவும்.
- 3
இப்பொழுது ஊறவைத்த பொட்டுக் கடலையில் இருந்து ஒரு ஸ்பூன் அல்லது ஒன்றரை ஸ்பூன் அளவு இதில் சேர்த்து மூடி போட்டு நன்றாக பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும்.இதற்கு நன்றாக மைய அரைக்க கூடாது அதே சமயத்தில் ரொம்ப குறை கூற வேண்டும் இருக்கக்கூடாது ஒரு மீடியமான பதத்தில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 4
இப்பொழுது கடாயில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் விட்டு அதில் எண்ணை காய்ந்ததும் காய்ந்த மிளகாய் சேர்க்கவும் காய்ந்த மிளகாய் நன்கு வளர்ந்தவுடன் கடுகு சீரகம் வெந்தயம் ஒரு சிறிய துண்டு கட்டி பெருங்காயம் அனைத்தையும் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
- 5
எல்லாம் நன்கு பொரிந்தவுடன். அரை டீஸ்பூன் அளவுக்கு அந்த எண்ணெயில் மஞ்சள் தூளை சேர்த்து நன்கு வதக்கவும் இப்பொழுது ஸ்டவ்வை ஆஃப் செய்து அரைத்து வைத்திருக்கும் விழுதை அதில் சேர்த்து நன்றாக அந்த சூட்டிலேயே நன்றாக கலந்து கொள்ளவும் தேங்காயின் பச்சை வாசனை போகும் வரை.
- 6
தேங்காய் உடைய பச்சை வாசனை நன்கு போனபிறகு நன்றாக கையில் பீட் செய்து வைத்திருக்கும் கெட்டித் தயிரை அதில் ஊற்றவும்.
- 7
தயிர் சேர்த்ததும் ஸ்கான் செய்து நன்றாக கலந்து கொள்ளவும் மிதமான சூட்டிலேயே இருக்க வேண்டும். அதிக தீயில் வைத்து விடாதீர்கள். மிதமான சூட்டிலேயே நன்கு கலந்துவிடவும் இதற்குத் தண்ணீர் எதுவும் சேர்க்கத் தேவையில்லை சூடாக கெட்டித் தயிரை அப்படியே தண்ணீர் பாதத்திற்கு மாற ஆரம்பிக்கும் அந்த நிலையிலேயே இதை இறக்கிவிடவும் கொதிக்க விடக்கூடாது சூடாகி ஒரு லிக்விட் கன்சிஸ்டன்ஸி வந்தால் போதும் இறக்கும் போது கருவேப்பிலை தூவி இறக்கினால் சுவையான பாரம்பரியமான மோர்க்குழம்பு தயார் ஆகிவிட்டது.
- 8
ஒருமுறை செய்து பாருங்கள் நன்றி.
Similar Recipes
More Recipes












கமெண்ட்