சாபுதானா கிச்சடி (Saabudana khichadi recipe in tamil)

ARP. Doss
ARP. Doss @cook_21334547

இந்த வார கோல்டன் ஆப்ரன் போட்டியில் கிச்சடி வார்த்தையை வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன் வாங்க செய்முறையை பார்க்கலாம்.#GA4

சாபுதானா கிச்சடி (Saabudana khichadi recipe in tamil)

இந்த வார கோல்டன் ஆப்ரன் போட்டியில் கிச்சடி வார்த்தையை வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன் வாங்க செய்முறையை பார்க்கலாம்.#GA4

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
இரண்டு நபர்களுக்கு
  1. 250 கிராம் ஜவ்வரிசி
  2. 1 வெங்காயம்
  3. 2 பச்சை மிளகாய்
  4. 1 டீஸ்பூன் சீரகம்
  5. எண்ணெய் தேவையான அளவு
  6. 50 கிராம் வேர்க்கடலை
  7. தேவையானஅளவு உப்பு
  8. கறிவேப்பிலை சிறிதளவு
  9. 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  10. எலுமிச்சை சாறு சிறிதளவு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஜவ்வரிசியை 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஊறவைத்த பிறகு இப்படிதான் ஜவ்வரிசி இருக்கும்.

  2. 2

    இப்போது கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் பச்சை மிளகாய் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.

  3. 3

    இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.

  4. 4

    இப்பொழுது இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போன பிறகு அதில் எடுத்து வைத்திருக்கும் வேர்க்கடலை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.

  5. 5

    அத்துடன் ஊறவைத்து வைத்திருக்கும் ஜவ்வரிசியை அதில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு ஒரு பத்து நிமிடம் நன்றாக கலந்து இறக்கினால் சுவையான சாபுதானா கிச்சடி ரெடி.

  6. 6

    ஒருமுறை செய்து பாருங்கள் நன்றி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
ARP. Doss
ARP. Doss @cook_21334547
அன்று

Similar Recipes