ஹோம் மேட் குர்குரே

#kids1 குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த குர்குரே இனி வீட்டிலேயே தயார் செய்யலாம்.. ஹெல்த்தி டேஸ்டி.
ஹோம் மேட் குர்குரே
#kids1 குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த குர்குரே இனி வீட்டிலேயே தயார் செய்யலாம்.. ஹெல்த்தி டேஸ்டி.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவையும் கடலை மாவையும் உப்பு சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.
- 2
அரிசி மாவை அளந்த அதே கப்பில் தண்ணியையும் அளந்து கொள்ளவும்.
- 3
. கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மாவை கட்டியில்லாமல் கலக்கவும்.
- 4
. பின்பு ஒரு தவாவில்.ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி,, இந்த மாவை அதில் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
- 5
வதக்கிய பின்பு மீண்டும் சிறிது எண்ணெய் ஊற்றி நன்கு பிசையவும்.
- 6
. பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
- 7
உருட்டிய மாவை கையில் வைத்து நீளவாக்கில் தேய்க்கவும்.
- 8
கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி,, தேய்த்த குர்குரே ஐ பொரித்து எடுக்கவும்.
- 9
ஒரு பாத்திரத்தில் பொரித்த குர்குரே ஐ போட்டு அதில் ஒரு ஸ்பூன் காஷ்மீரி மிளகாய்த்தூள், ஒரு ஸ்பூன் சாட் மசாலா,,, சேர்த்துக் கொள்ளவும்.
- 10
. உப்பு ஏற்கனவே நாம் சேர்த்து உள்ளதால் தேவைப்பட்டால் மீண்டும் சிறிதளவு சேர்த்துக் கொள்ளலாம் ்
- 11
சூப்பரான ஹெல்தியான குர்குரே தயார்.
Similar Recipes
More Recipes




















கமெண்ட் (2)