எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடங்கள்
5பேர்கள்
  1. 1கப் கடலை மாவு
  2. 3/4கப் சர்க்கரை
  3. 4 ஏலக்காய்
  4. 1/4ஸ்பூன் பேக்கிங் சோடா
  5. பொரிப்பதற்கு எண்ணெய்
  6. 1ஸ்பூன் நெய்
  7. 1/4ஸ்பூன் மஞ்சள் புட் கலர்

சமையல் குறிப்புகள்

30நிமிடங்கள்
  1. 1

    கடலைமாவு, பேக்கிங் சோடா சேர்த்து ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்

  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூந்தி கரண்டியில் மாவை ஊற்றி கரண்டியை தட்டினால் மாவு எண்ணெயில் முத்துமுத்தாக விழும்

  3. 3

    முக்கால் பதம் வெந்ததும் எடுக்கவும்...

  4. 4

    ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து தண்ணீர் விட்டு ஒரு கம்பிபதம் வந்ததும் அதில் மஞ்சள் கலர் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்

  5. 5

    செய்து வைத்துள்ள பூந்தியில் கால் பங்கு மட்டும் எடுத்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்

  6. 6

    இது எதற்காக என்றால் லட்டு பிடிக்கும் போது சேர்ந்து வரும். இல்லை என்றால் உருட்ட கஷ்டமாக இருக்கும்

  7. 7

    பாகு சூடாக இருக்கும் போது அதில் பூந்தி சேர்த்து கலந்து அத்துடன் 1ஸ்பூன் நெய் விடவும்.. இதில் விருப்ப பட்டால் முந்திரி, திராட்சை, சேர்த்து கொள்ளலாம்

  8. 8

    கை பொருக்கும் சூடு வந்ததும் லட்டை உருண்டையாக உருட்டவும்

  9. 9

    இப்போது சுவையான லட்டு தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes