தவா கத்தரிக்காய் ஃப்ரை
சமையல் குறிப்புகள்
- 1
கத்தரிக்காயை நன்கு கழுவி வட்ட வடிவில் அரிந்து கொள்ளவும்
- 2
ஒரு கிண்ணத்தில் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் மிளகுத்தூள் இஞ்சி பூண்டு விழுது உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் நன்கு
கிளறி கொள்ளவும் - 3
இந்த மசாலாவை கத்தரிக்காயின் இருபுறமும் தேய்த்து 30 நிமிடங்கள் அப்படியே மூடி வைக்கவும்
- 4
பின்னர் தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் இந்த கத்தரிக்காயை ஒவ்வொன்றாக போடவும்
- 5
மிதமான தீயில் கத்தரிக்காயை இருபுறமும் வேகவைக்கவும்
- 6
அவ்வளவு தான் சுவையான தவா கத்தரிக்காய் ஃப்ரை ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14017125









கமெண்ட்