அதிரசம் (Athirasam recipe in tamil)

#deepavali
எங்கள் குடும்பத்தில் தீபாவளி அன்று கௌரி விரதம் கடைப்பிடித்து அதில் முக்கியமாக கேதாரகௌரி அம்மனுக்கு அதிரசம் படைப்போம் அதன் செய்முறையை நான் இங்கே பகிர்ந்துள்ளேன் தோழிகளே
அதிரசம் (Athirasam recipe in tamil)
#deepavali
எங்கள் குடும்பத்தில் தீபாவளி அன்று கௌரி விரதம் கடைப்பிடித்து அதில் முக்கியமாக கேதாரகௌரி அம்மனுக்கு அதிரசம் படைப்போம் அதன் செய்முறையை நான் இங்கே பகிர்ந்துள்ளேன் தோழிகளே
சமையல் குறிப்புகள்
- 1
மாவு பச்சரிசியை சுத்தம் செய்து தண்ணீர் விட்டு கழுவி அதைத் துணியில் பரத்தி காயவைக்கவும் தண்ணீர் உலர்ந்த பிறகு அரிசி ஈரப்பதம் இருக்கும் பொழுதே மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும்
- 2
முக்கால் கிலோ வெள்ளத்திற்கு 30 லிருந்து 40 மில்லி அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து பாகு காய்ச்சவும் தண்ணீரில் சேர்க்கும் பொழுது தளர்வாக உருட்டும் பதத்திற்கு வரவேண்டும் பார்ப்பதற்கு கண்ணாடிபோல் இருக்கும் பாகு காய்ச்சும் பொழுதே அதில் சிறிது ஏலக்காய் பொடி மற்றும் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து காய்ச்சவும்
- 3
இந்த பாகு வெல்லத்தை அரைத்து வைத்த அரிசி மாவில் சிறிது சிறிதாக ஊற்றி மெதுவாக நன்றாகப் பிசைந்து கொள்ளவும்
- 4
இந்தக் கலவையை காயாமல் மாவின் மேல் சிறிது நல்லெண்ணெய் துடைத்து மூடிவைத்து ஒரு மணி நேரம் கழித்து அதிரசம் சுட பயன்படுத்தலாம் எண்ணையை அடுப்பில் வைத்துக் காய்ச்சவும்
- 5
மாவை சிறு உருண்டைகளாக எடுத்து வாழை இலையிலோ அல்லது வெண்ணை பேப்பரில் வட்டமாக தட்டி ஒவ்வொன்றாக மிதமான தீயில் எண்ணெயில் பொரித்து எடுக்கவும் ஒரு பக்கம் சிவந்த பிறகு மறு பக்கம் மெதுவாக திருப்பி போட்டு வெந்த பிறகு எடுக்கவும்
- 6
அதிரசம் அமுக்கும் கருவியில் வைத்து அதிரசத்தில் உள்ள எண்ணெயைப் பிழிந்து எடுத்தாள் சுவையான அதிரசம் தயார்😋😋😋
Keywords
Similar Recipes
More Recipes














கமெண்ட்