90 ஸ் கிட்ஸ் மடக்கு (Madakku recipe in tamil)

90ல் பிறந்த குழந்தைகளின் ஃபேவரிட் ஆன ஸ்வீட் இது மிகவும் எளிமையாக வீட்டில் செய்யக்கூடியது மிகவும் சுவையானது இக்கால குழந்தைகளுக்கும் கொடுப்பதற்கு உடம்புக்கு மிகவும் நல்லது வாங்க செய்முறையை பார்க்கலாம்.#kids2
90 ஸ் கிட்ஸ் மடக்கு (Madakku recipe in tamil)
90ல் பிறந்த குழந்தைகளின் ஃபேவரிட் ஆன ஸ்வீட் இது மிகவும் எளிமையாக வீட்டில் செய்யக்கூடியது மிகவும் சுவையானது இக்கால குழந்தைகளுக்கும் கொடுப்பதற்கு உடம்புக்கு மிகவும் நல்லது வாங்க செய்முறையை பார்க்கலாம்.#kids2
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாத்திரத்தில் கோதுமை மாவை சேர்க்கவும்.
- 2
அதனுடன் 3 டீஸ்பூன் அளவு நெய் விட்டு சிறிதளவு உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
- 3
பிசைந்த மாவை ஒரு 5 நிமிடம் அப்படியே மூடி வைக்க வேண்டும். பிறகு 5 நிமிடம் கழித்து அப்பாவை திரும்பவும் நன்கு பிசைந்து சப்பாத்தி போல் அதை திரட்ட வேண்டும்.
- 4
சப்பாத்தி போல் திரட்டிய பிறகு அதை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்க வேண்டும். அதற்கு முதலில் ஒரு சப்பாத்தியை வைத்து அதில் நெய் தடவி அதன் மேல் மாவை தூவவேண்டும். அதுபோல் ஒவ்வொரு அடுக்கையும் அடுக்கி நன்கு திரட்டி ரோல் செய்து கட் பண்ண வேண்டும்.
- 5
கட் பண்ணி எடுத்த மடக்கில் பூரிக்கட்டையால் சிறிதாக அமுக்கி திரட்ட வேண்டும். இப்போது இதற்கான சுகர் சிரப் செய்ய ஆரம்பிக்கலாம்.
- 6
அதற்கு பாத்திரத்தில் பொடியாக்கிய கற்கண்டை சேர்க்கவேண்டும் அதனுடன் தேவையான அளவு தண்ணீர் விட்டு ஒரு கம்பி பதம் வரும் வரை நன்றாக காய்ச்சி எடுத்துக் கொள்ளவேண்டும் இதில் நான் ஆரஞ்ச் கலர் சேர்த்து இருக்கிறேன் உங்களுக்கு விருப்பம் என்றால் நீங்கள் கலர் பவுடர் யூஸ் பண்ணலாம் இல்லை என்றால் தவிர்க்கலாம்.
- 7
இப்போது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காயவிடவும் எண்ணெய் காய்ந்ததும் தயார் செய்து வைத்திருக்கும் மடக்கை அதில் போட்டு நன்றாக பொன்னிறமாக பொரித்தெடுத்து அதை தயார் செய்து வைத்திருக்கும் சிறப்பில் சேர்த்தால். சுவையான மடக்கு தயாராகிவிடும் ஒரு பத்து நிமிடம் சலசலப்பில் இருந்தால் போதும்.
- 8
மிகவும் சுவையான மற்றும் ஹெல்தியான டெசெர்ட் வகை இது ஒரு முறை செய்து பாருங்கள் நன்றி.
Similar Recipes
More Recipes









கமெண்ட்