நெத்திலி பிரை (Nethili fry recipe in tamil)

Vaishnavi @ DroolSome
Vaishnavi @ DroolSome @cook_21174279

நெத்திலி பிரை (Nethili fry recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 300 கிராம் நெத்திலி
  2. 1/4கப் கடலை மாவு
  3. 1டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
  4. 1டேபிள் ஸ்பூன் சோள மாவு
  5. 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  6. 1ஸ்பூன் மிளகுத்தூள்
  7. 1ஸ்பூன் மிளகாய்த்தூள்
  8. 1ஸ்பூன் எலுமிச்சை சாறு
  9. தேவையானஅளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    நெத்திலியுடன் எலுமிச்சை சாறு, மிளகாய்த்தூள் மற்றும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்றாக கலந்து குறைந்தது பத்திலிருந்து அரை மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும்.

  2. 2

    இப்பொழுது மேல் மாவுக்கு ஒன்றுக்காக அரிசி மாவு சோள மாவு கடலை மாவு மிளகுத்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

  3. 3

    ஊற வைத்திருக்கும் நெத்திலி எடுத்த மாவின் மீது தனித்தனியாக பிரட்டி வைக்கவும்.

  4. 4

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடு ஏறியதும் பிரட்டி வைத்திருக்கும் நெத்திலி சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும். மூன்று நிமிடத்தில் மிதமான தீயில் வறுக்கவும்.

  5. 5

    சுவையான நெத்திலி ஃப்ரை தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Vaishnavi @ DroolSome
Vaishnavi @ DroolSome @cook_21174279
அன்று

Similar Recipes