தம் வைக்காத தம் மட்டன் பிரியாணி
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை தண்ணீரில் ஊறவைக்கவும்.
- 2
மட்டன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, சேர்த்து 3 சத்தம் வரும் வரை வேக வைக்கவும்.
- 3
ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் சேர்த்து சூடானதும் கரம் மசாலா, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 4
பின்பு அதில் வெங்காயம், உப்பு சேர்த்து நன்கு வேக வைக்கவும்.
- 5
வெங்காயம் வெந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போனதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 6
தக்காளி நன்கு வதங்கியதும் பிரியாணி மசாலா சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் அதில் தயிர் சேர்த்து கலந்து கொதிக்க வைக்கவும்
- 7
பின்பு அதில் வேக வைத்த கறி, கலந்து கொதிக்க விடவும். பின்பு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
- 8
கொதி வர தொடங்கியதும் வடித்த அரிசி சேர்த்து 10 நிமிடம் வேக வைக்கவும்
- 9
சாதம் தண்ணீரில் குறைந்ததும் மூடி போட்டு, மூடியில் ஓட்டை இருந்தால் அதில் ஒரு கிராம்பு துண்டு வைத்து அதில் அடைக்கவும்
- 10
15 நிமிடம் குறைந்த தீயல் வைத்து வேக வைக்கவும். 20 நிமிடம் மூடி துறக்காமல் வைத்து பின் பரிமாறவும்.
- 11
உதிரி உதிரியாய் தம் பிரியாணி தயார்.
Keywords
Similar Recipes
More Recipes






















கமெண்ட்