சமையல் குறிப்புகள்
- 1
தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்துக் கொள்ளவும். ஒரு கப் அரிசியை இரண்டுமுறை கழுவி, 10நிமிடம் முன்பே ஊறவைக்கவும்.
- 2
குக்கரில் 2ஸ்பூன் எண்ணெய் விட்டு, பிரியாணி இலை, லவங்கம், பட்டை,ஏலக்காய், அன்னாசி மொட்டு, சேர்த்து வதக்கவும். பின் பச்சை மிளகாயை கீறி போட்டு வதக்கவும்.
- 3
நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறமாக வறுத்து, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். தக்காளியை சேர்த்து வதக்கவும்.
- 4
நறுக்கிய புதினா, கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கவும். பீன்ஸ், கேரட், பட்டாணிகளை சேர்த்து வதக்கவும்.
- 5
பின் மிளகாய் தூள், பிரியாணி மசாலா, மல்லித்தூள் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கவும்.
- 6
4ஸ்பூன் தயிரை சேர்த்து வதக்கவும். பின் ஊறவைத்த அரிசியை சேர்த்து கலந்து விடவும். பின் தண்ணீர் சேர்க்கவும்.உப்பு சேர்த்து, 1/2ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து விடவும். (அதாவது 1கப் அரிசிக்கு 1 1/2கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.) கொதி வந்ததும் குக்கர் மூடி போட்டு, மிதமான தீயில் 2 விசில் விட்டு இறக்கவும்.
- 7
பின்னர், முந்திரியை நெய்யில் வறுத்து சேர்த்துக்கவும். சிறிது கொத்தமல்லி தழை தூவி, தயிர் பச்சடியுடன் சேர்த்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சேமியா பிரியாணி. #kids3#lunchbox recipes
வித்தியாசமான முறையில் சேமியா பிரியாணி, மதிய உணவில் ... Santhi Murukan -
-
-
-
மேக்ரோனி மசாலா. #kids3#lunchboxrecipes
குழந்தைகளுக்கு பிடித்த மேக்ரோனி பாஸ்தா , அவர்களுக்கு பிடித்த காய்கறிகள் சேர்த்து சுவையான சத்தான மேக்ரோனி செய்து கொடுக்கலாம். Santhi Murukan -
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்