காரா பூந்தி (Kaara poondhi recipe in tamil)
#Grand1
🎄🍰🎶🇻🇮✝️🕍 ஸ்பெஷல்
சமையல் குறிப்புகள்
- 1
மேற்கூறிய தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.ஒன்றரைக் கப் கடலை மாவை கட்டியில்லாமல் சலித்து கொண்டு பூந்தி தேய்க்கும் பதத்திற்கு தண்ணீர் ஊற்றி கால் ஸ்பூன் உப்புப் போட்டுக் கரைத்துக் கொள்ளவும். நீர்க்கவும் இல்லாமல் கெட்டியாகவும் இல்லாமல் கரைக்க. ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி பூந்தி மாவை குழி கரண்டியில் மொண்டு சல்லி கரண்டியில் எண்ணெய் காய்ந்ததும் வாணலியில் சேர்த்து விடவும். மிதமான தீயில் வேக விட்டு லேசாக கிளறி விடவும்.
- 2
பூந்தி வெந்தவுடன் சிவக்க எடுத்து வைத்துக் கொள்ளவும்.அதே எண்ணெயில் அவுல், கடலைக் கொட்டை, பொட்டுக்கடலை, கறிவேப்பிலை எல்லாவற்றையும் தனித்தனியாக பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 3
இவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் பெருங்காயத்தூள், வர மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும். சுவையான கார பூந்தி ரெடி. இதனுடன் ஓமப் பொடி செய்து சேர்த்துக் கொண்டால் மிக்ஸர் ஆகி விடும். செய்ய முடியவில்லை என்றால் கடையில் 50 கிராம் ஓமம் பொடி சேர்த்து கலந்து கொள்ளலாம்.
Keywords
Similar Recipes
More Recipes













கமெண்ட் (5)