கேப்சிகம் சிக்கன் கிரேவி

#Wd
சிக்கன் கிரேவி என்றால் அனைவருக்கும் அலாதி பிரியம் அதிலும் கேப்சிகம் சிக்கன் கிரேவி மிகவும் சுவையாக இருக்கும் ஹோட்டல் சுவையில்
கேப்சிகம் சிக்கன் கிரேவி
#Wd
சிக்கன் கிரேவி என்றால் அனைவருக்கும் அலாதி பிரியம் அதிலும் கேப்சிகம் சிக்கன் கிரேவி மிகவும் சுவையாக இருக்கும் ஹோட்டல் சுவையில்
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருள்கள்
- 2
ஒரு இரும்பு கடாயில் தேவையான அளவு எண்ணெய் விட்டு அதில் குடை மிளகாயை போட்டு ஐந்து நிமிடம்வதக்கி தனியே எடுத்துவைக்க வேண்டும்
- 3
ஒரு மிக்ஸி ஜாரில் பெரிய வெங்காயத்தை போட்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும் பின்னாளில் தக்காளி துண்டுகளைப் போட்டு விழுதாக அரைத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும் மீண்டும் இஞ்சி பூண்டு சோம்பு சேர்த்து அரைத்து அதையும் எடுத்துக் கொள்ளவும்
- 4
நாம் ஏற்கனவே குடை மிளகாய் வதக்கிய அதே வாணலியில் பட்டை ஏலக்காய் கிராம்பு போட்டு தாளித்து பின் நாம் அரைத்த வெங்காய விழுது மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு 3 நிமிடம் வதக்கவும் பின் அதில் தக்காளி விழுதை போடவும் அதையும் நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும் பின் இஞ்சி பூண்டு சோம்பு அரைத்த கலவையை சேர்த்து நன்கு கிளறவும்
- 5
பின் மல்லி சீரகம் மிளகுத்தூள் சேர்த்து அரைத்த மசாலா பொடி ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் அரை ஸ்பூன் கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும் பின் அதனுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது நெய் சேர்க்க வேண்டும்
- 6
மசாலா பச்சை வாசனை போய் எண்ணெய் பிரிந்து வரும் வேளையில் நாம் ஏற்கனவே பொரித்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை உள்ளே சேர்க்கவேண்டும் பின் அதனுடன் நாம் எண்ணெயில் வதக்கி வைத்துள்ள குடை மிளகாய் துண்டுகளை உள்ளே சேர்க்கவேண்டும் சிறிதளவு தண்ணீர் சேர்த்துபின் சிறிதாக வெட்டி வைத்துள்ள மல்லி இலை தூவி 5 நிமிடம் சிறு தீயில் வைத்து இறக்க வேண்டும்
- 7
இப்போது சுவையான கேப்சிகம் சிக்கன் கிரேவி ரெடி
Keywords
Similar Recipes
More Recipes























கமெண்ட் (3)