பிரெட் உப்புமா / Bread Upma

Sai's அறிவோம் வாருங்கள் @cook_432449
பிரெட் உப்புமா / Bread Upma
சமையல் குறிப்புகள்
- 1
பிரெட்டில் ஓரத்தை நறுக்கி விட்டு, சிறிய சதுரத் துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்
- 2
கடாயில் 4 ஸ்பூன் எண்ணெய் விட்டு, கடுகு பொரிந்ததும் சீரகம், பிறகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு பொன்னிறமாக வறுக்கவும்
- 3
அரிந்த இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கவும்
- 4
பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்
- 5
தக்காளி போட்டு தோல் நீங்கும் வரை வதக்கவும்
- 6
உப்பு, மஞ்சள்தூள், மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கவும்
- 7
சிறிது தண்ணீர் விட்டு மூடி 3-4 நிமிடங்கள் வேக வைக்கவும்
- 8
தீயை அடக்கி விட்டு, நறுக்கிய பிரெட் துண்டுகளை சேர்த்து வதக்கவும்
- 9
அடுப்பை அனைத்து விட்டு லெமன் பிழிந்து கலந்து விட வேண்டும்.
சுவையான பிரெட் உப்மா ரெடி
- 10
கொத்தமல்லி தூவி பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14704684
















கமெண்ட்