வாழைப்பழ மால்புவா

Dhibiya Meiananthan
Dhibiya Meiananthan @Dhibi_kitchen

#GA4#week 25#rajastani

வாழைப்பழ மால்புவா

#GA4#week 25#rajastani

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 minutes
4 பரிமாறுவது
  1. மைதா மாவு ஒரு கப்
  2. வாழைப்பழம் ஒன்று
  3. சர்க்கரை ஒரு ஸ்பூன்+ஒரு கப்
  4. பால் ஒரு டம்ளர்
  5. ஏலக்காய் தூள்
  6. சோம்பு கால் ஸ்பூன்
  7. ரெட் ஃபுட் கலர் விருப்பமெனில்

சமையல் குறிப்புகள்

30 minutes
  1. 1

    முதலில் வாழைப்பழத்துடன் சோம்பு ஏலக்காய் பால் சிறிதளவு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்

  2. 2

    அதை பவுலில் மாற்றி அதனுடன் மைதா மாவு சேர்த்து பால் சேர்த்து கிளறவும் பின்பு தேவை எனில் சிறிது தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து வைத்துக் கொள்ளவும்

  3. 3

    20 நிமிடம் அதை மூடி வைத்து விடவும். அந்த நேரத்தில் ஒரு கப் சர்க்கரை ஒரு கப் தண்ணீர் சேர்த்து பாகு வைத்துக் கொள்ளவும். ஏலக்காய்தூள் சேர்த்துக் கொள்ளவும் தேவையெனில் ஃபுட் கலர் சேர்த்துக் கொள்ளலாம்

  4. 4

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் ஒவ்வொரு கரண்டியாக மாவு கலவையை ஊற்றி வேகவைத்து எடுக்கவும்

  5. 5

    பின்பு அதை சர்க்கரைப் பாகில் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்

  6. 6

    மேலே முந்திரி பிஸ்தா தூவி பரிமாறவும். வாழைப்பழ மால்புவா ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Dhibiya Meiananthan
Dhibiya Meiananthan @Dhibi_kitchen
அன்று

Similar Recipes