முருங்கைக்காய் தோரன்
சமையல் குறிப்புகள்
- 1
முருங்கைக்காயை தோல் சீவி விட்டு நடுத்தரத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
- 2
மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல்,, ஜீரகம், பச்சை மிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம், இஞ்சி இவற்றை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
- 3
ஒரு பாத்திரத்தில் முருங்கைக்காய் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து அதில் உப்பும், மஞ்சள் தூளும் சேர்த்து முருங்கைக்காயை அந்த தண்ணீரில் போட்டு வேக வைக்கவும்.
- 4
முருங்கைக்காய் வெந்ததும் அதை வடிகட்டியில் வடித்து வைக்கவும்.
- 5
சீனச் சட்டி அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வற்றல் மிளகாய், கறிவேப்பிலை போட்டுத் தாளித்து விட்டு, அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்
- 6
பின்னர் இதில் அரைத்தத் தேங்காயைப் சேர்த்து வதக்கவும். பச்சை மணம்
மாறியதும் வேக வைத்த முருங்கைக்காயை சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணி இரண்டு நிமிடம் வேக வைத்து இறக்கவும். மிகவும் சுவையான முருங்கைக்காய் தோரன்
ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
















கமெண்ட்