சமையல் குறிப்புகள்
- 1
பாஸ்மதி அரிசியை அலசி அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
காளானை சுத்தம் செய்து நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து ஊற வைத்த அரிசியை அதில் சேர்க்கவும்.
- 3
பின் தேவையான அளவு உப்பு, 1 பட்டை, 1 ஏலம், 1 பிரியாணி இலை, 1 டீஸ்பூன் முழு மிளகு, 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து அரிசி 75% வேகும் வரை வைக்கவும்.
- 4
அரிசி 75% வெந்தவுடன் அதை வடிகட்டி தனியே வைக்கவும்.
- 5
பிரியாணி தாளிப்பதற்கு முதலில் சட்டியை சூடு செய்யவும்
- 6
சட்டி சூடான பிறகு 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து சூடானதும் அதில் 1பட்ட, 1 ஏலம், 1 கிராம்பு சேர்க்கவும்.
- 7
பின் நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்
- 8
வெங்காயம் நன்கு வதங்கி வந்ததும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்
- 9
இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போன பிறகு அதில் தக்காளி சேர்க்கவும்
- 10
தக்காளி நன்கு வதங்கி வந்த பிறகு புதினா மல்லி பச்சைமிளகாய், தயிர் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 11
பிறகு 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள், ¹ 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள்,
1 1/2பிரியாணி மசாலா, உப்பு தேவைக்கு சேர்த்து நன்கு வதக்கவும். - 12
மசாலாக்களின் பச்சை வாசனை போன பிறகு நறுக்கி வைத்த காளானை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 13
பிறகு மூடி வைத்து 10 நிமிடம் வேக வைக்கவும்.
- 14
இப்பொழுது காளான் நமக்கு நன்கு வெந்திருக்கும்.
- 15
பிறகு ஒரு முறை நன்கு கிளறி விடவும். பிறகு இவற்றில் 75 சதவீதம் வேகவைத்த பாசுமதி சோறு இதன் மேலே போடவும்.
- 16
அதன் மேலே சிறிது புதினா சிறிது மல்லி தூவி விடவும்
- 17
பிறகு ஒரு டீஸ்பூன் அளவிற்கு மிளகுத்தூளை அதன் மேலே தூவி ஒரு ஸ்பூன் நெய் சேர்க்கவும்.
- 18
இப்பொழுது தோசைக்கல்லை சூடு செய்து அதன் மேலே பிரியாணி இருக்கக்கூடிய பாத்திரத்தை வைக்கவும்.
பிரியாணி பாத்திரத்தை மூடி போட்டு சரியாக 10 நிமிடம் தம் போடவும். - 19
10 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து மீண்டும் பத்து நிமிடம் அப்படியே வைத்து விடவும்.
- 20
பத்து நிமிடம் கழித்து மெதுவாக கிளறி விடவும்.
- 21
இப்போது நமக்கு சுவையான காளான் மிளகு பிரியாணி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
குக்கர் காளான் பிரியாணி
#NP1விரத நாட்களில், அசைவ பிரியாணிக்கு பதில் அதை சுவையில் இருக்கும் காளான் பிரியாணி Shailaja Selvaraj -
காளான் பிரியாணி
# Nutrients 2காளானில் ஃபைபர், பொட்டாசியம், விட்டமின் சி அதிகம் உள்ளது. இதில் அதிக அளவு புரோட்டின், குறைந்த கலோரிகள் இருக்கிறது. இது எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவு. எலும்புகளை வலுப்படுத்தும். இன்னும் அதிக சத்துக்கள் உள்ளன. என் மகனுக்கு மிகவும் பிடித்த உணவு. Manju Jaiganesh -
-
-
-
-
-
-
-
-
-
ஹாட் ரைஸ் குக்கர் காளான் பிரியாணி
#salnaஇன்றைக்கு நாம் பார்க்கப்போகிற ரெசிபி மிகவும் சுலபமாக ரைஸ் குக்கரில் செய்யக்கூடிய காளான் பிரியாணி. Aparna Raja -
காளான் பன்னீர் தம் பிரியாணி
#NP1 சீரக சம்பா அரிசியில் செய்யப்படும் இந்த தம் பிரியாணி மிகவும் ருசியாக இருக்கும் Cookingf4 u subarna -
-
More Recipes
கமெண்ட்