ஸ்ப்ரிங் பொட்டேட்டோ
சமையல் குறிப்புகள்
- 1
நான்கு சிறிய அளவு உருளைக்கிழங்கை நன்கு கழுவி அதை ஒரு மூங்கில் குச்சியில் சொருகி வைக்க வேண்டும்.
- 2
சொருகிய பிறகு கத்தியை வைத்து ஸ்பிரிங் போல கட் செய்து கொள்ள வேண்டும். பிறகு அதை ஸ்பிரிங் வடிவில் இழுத்து விட வேண்டும். இதேபோல மற்ற உருளைக்கிழங்கு களையும் தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- 3
அதன் பிறகு ஒரு பௌலில் மைதா மாவு, சோள மாவு மற்றும் 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 4
அதன் பிறகு அரை டீஸ்பூன் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
- 5
கலந்து வைத்துள்ள மாவை உருளைக்கிழங்கின் மீது ஊற்ற வேண்டும். அனைத்துப் புறமும் கோட் ஆகும்படி ஊற்றிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு பேனில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ள வேண்டும்.
- 6
சூடான எண்ணெயில் உருளைக்கிழங்குகளை போட்டு இருபுறமும் நன்கு பொரித்த பிறகு வெளியில் எடுக்க வேண்டும்.
- 7
பிறகு சாட் மசாலா சீரகத்தூள் அரை டீஸ்பூன் மிளகாய் தூள் மற்றும் கால் டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு கலந்து பொரித்து வைத்துள்ள உருளைக்கிழங்கின் மீது தூவி விடவேண்டும்.
- 8
ஸ்பிரிங் பொட்டேடோ செய்வதற்கு கருவி ஏதும் இல்லாமல் சுலபமாக வீட்டிலேயே தயாராகிவிட்டது.
Similar Recipes
More Recipes



























கமெண்ட் (4)