பீர்க்கங்காய் கறி குழம்பு

Sara's Cooking Diary
Sara's Cooking Diary @Rayeeza
Madurai

பீர்க்கங்காய் கறி குழம்பு

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 1/2 மணி நேரம்
5 நபர்கள்
  1. 300 கிராம் மட்டன்
  2. 1 குழி கரண்டி நல்லெண்ணெய்
  3. 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  4. 2 தக்காளி
  5. 150 கிராம் சிறிய வெங்காயம்
  6. 1 டீஸ்பூன் சீரகம்
  7. 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  8. 500 கிராம் பீர்க்கங்காய்
  9. 2 டீஸ்பூன் மல்லித்தூள்
  10. 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  11. 2 பச்சை மிளகாய்
  12. 1/2 மூடி தேங்காய்
  13. 10 முந்திரி
  14. தேவையானஅளவு தண்ணீர்
  15. சிறிதளவுகொத்தமல்லி

சமையல் குறிப்புகள்

1 1/2 மணி நேரம்
  1. 1

    முதலில் குக்கரில் நல்லெண்ணெய் சேர்த்து அதனுடன் கறியை நன்கு கழுவி சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கிய பிறகு மஞ்சள் தூள் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.

  2. 2

    அதனுடன் தக்காளியை நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கொள்ள வேண்டும். மிக்ஸியில் சிறிய வெங்காயம் மற்றும் சீரகத்தை அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

  3. 3

    அரைத்து வைத்த வெங்காயம் சீரகத்தை சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

  4. 4

    கறி வேகுவதர்க்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு பத்து விசில் வைத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு வெந்த கறியை ஒரு கடாயில் மாற்றிக்கொள்ள வேண்டும்.

  5. 5

    பீர்க்கங்காயை தோல் உரித்து ரவுண்டாக கட் செய்து அதை கடாயில் சேர்த்து கொள்ள வேண்டும். அதனுடன் மல்லித்தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

  6. 6

    பிறகு மிளகாய்த்தூள், பச்சைமிளகாய் சேர்த்து நன்கு கலந்து காய் வேகும் வரை வைத்துக்கொள்ள வேண்டும்.

  7. 7

    காய் நன்கு வெந்த பிறகு தேங்காய் மற்றும் முந்திரியை மிக்ஸியில் அரைத்து குழம்பில் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

  8. 8

    குழம்பிலிருந்து எண்ணெய் பிரிந்து வந்தவுடன் சிறிது கொத்தமல்லி தூவி மூடி வைக்கவேண்டும் 10 நிமிடங்கள் கழித்து சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும். எப்பொழுதும் சாப்பிடும் கறி குழம்பு போல இல்லாமல் ஒரு வித்தியாசமான முறையில் பீர்க்கங்காய் சேர்த்த கறி குழம்பு சமைத்து சுவைத்து பாருங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sara's Cooking Diary
அன்று
Madurai

Similar Recipes