சென்னை சிக்கன் பிரியாணி

மிகவும் எளிய முறையில் செய்யக்கூடிய குறைவான மசாலா பொருட்கள் பயன்படுத்தி சுவையான சென்னை சிக்கன் பிரியாணி!
சென்னை சிக்கன் பிரியாணி
மிகவும் எளிய முறையில் செய்யக்கூடிய குறைவான மசாலா பொருட்கள் பயன்படுத்தி சுவையான சென்னை சிக்கன் பிரியாணி!
சமையல் குறிப்புகள்
- 1
பாஸ்மதி அரிசியை கழுவி 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.ஒரு அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் சேர்க்கவும்.சூடாநதும் 5 ஏலக்காய்,கிராம்பு,2துண்டு பட்டை சேர்க்கவும்,பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்,பச்சைமிளகாய்,தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 2
பின் நன்கு சுத்தம் செய்த சிக்கனை சேர்த்து பிரட்டி விடவும்.பின் தயிர்,தே.அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.
- 3
பின் புதினா,மல்லி சேர்த்து மூடி வைத்து 15 நிமிடங்கள் சிக்கனை வேக விடவும்.
- 4
அடுத்ததாக ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அதில் 2ஏலக்காய்,கிராம்பு,பட்டை சாதத்திர்க்கு தே. அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.கொதித்ததும் ஊற வைத்த பாஸ்மதி அரிசி சேர்த்து முக்கால் பங்கு வெந்ததும் வடித்து கொள்ளவும்.
- 5
பின் தயார் படுத்திய பிரியாணி கிரெவி யுடன் சேர்த்து கலந்து விட்டு நெய் சேர்த்து 10நிமிடங்கள் தம் போடவும்.
Keywords
Similar Recipes
More Recipes












கமெண்ட்