சர்க்கரை பொங்கல்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அரிசி மற்றும் பருப்பை 15 நிமிடங்கள் ஊற வைக்கவேண்டும்.
- 2
ஒரு குக்கரில் 4 கப் தண்ணீர், உப்பு மற்றும் ஊறவைத்த அரிசியை நன்கு கழுவி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 3
குக்கரை மூடி 4 விசில் வைத்துக்கொள்ளவேண்டும்.
- 4
பிறகு குக்கரை திறந்து சாதத்தை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு பால் சேர்த்து நன்கு கலக்கவும்.
- 5
அதன் பிறகு ஏலக்காய் தூள் மற்றும் பொடித்த மண்டை வெல்லம் சேர்த்து நன்கு சாதத்துடன் கலந்து கொள்ள வேண்டும்.
- 6
பிறகு ஒரு டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
- 7
ஒரு பானில் 3 டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து கிஸ்மிஸ் மற்றும் முந்திரி சேர்த்து தாளித்து பொங்கலில் சேர்த்து விட வேண்டும்.
- 8
நன்கு கலந்த பிறகு 2 டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து பரிமாறினால் சுவையான சக்கரைப் பொங்கல் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14931779


























கமெண்ட்