சிக்கன் வருவல்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சிக்கனை மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்றாக அலசி எடுத்துக்கொள்ளவும்
- 2
முட்டை இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன், அரிசி மாவு கான்பிளவர் மாவு உப்பு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்,கரம் மசாலாத்தூள் பாதிசேர்த்து பிசைந்து 30 நிமிடம் வைக்கவும்
- 3
கடாயில் எண்ணெய் ஊற்றி சிக்கனை லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்
- 4
அதே கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு பட்டை பிரியாணி இலை கிராம்பு, ஏலக்காய், பச்சைமிளகாய், வரமிளகாய் வெங்காயம், சின்ன வெங்காயம்,வதங்கியவுடன் இஞ்சி பூண்டு 1 ஸ்பூன் சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும்
- 5
பிறகு தக்காளியை போட்டு நன்றாக வதங்கியவுடன் மிளகாய்த்தூள்1 மல்லித்தூள் சீரகத்தூள் மிளகுத்தூள் உப்பு கரம் மசாலாத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 6
வறுத்து வைத்த சிக்கனை போடவும்
- 7
நன்றாக சுருள சுருளக் கிளறவும். கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்
- 8
சுவையான சிக்கன் வறுவல் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes


















கமெண்ட்