திண்டுக்கல் குஸ்கா பிரியாணி
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை ஒரு 20 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
- 2
மசாலாவிற்கு தேவையான பொருட்களை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுக்கவும்.
- 3
குக்கரில் நெய் சேர்க்கவும்.
- 4
அதன் பின் கருவேப்பில்லை, பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய், பட்டை துண்டு, அன்னாச்சிப்பூ சேர்த்து வதக்கவும்.
- 5
பின்பு தக்காளி, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் மற்றும் அரைத்த மசாலா,கொத்தமல்லி தூள் சேர்த்து வதக்கவும்.
- 6
நன்கு வதங்கியதும் தேவையான அளவு உப்பு, தயிர், கொத்தமல்லி, புதினா சேர்க்கவும்.
- 7
அதன் பின் தண்ணீர், அரிசி சேர்த்து கிளறி 2 விசில் வரும் வரை வேக வைத்து விசில் அடங்கிய பின் வேகவைத்த முட்டை, கத்திரிக்காய் தொக்கு, வெங்காய பச்சடி வைத்து பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14974498




கமெண்ட்