இடியாப்பம் ஆட்டுக்கால் பாயா
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் இடியாப்ப அரிசி மாவை போட்டு அதில் உப்பை சேர்த்து நன்கு கலக்கவும்.பின்பு கொதி நீரை மாவில் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.பிசைந்த மாவை இடியாப்ப அச்சில் போட்டு பிரிந்து இட்லி பானையில் வைத்து வேக விடவும்.இப்போது இடியாப்பம் தயார்
- 2
ஒரு குக்கரில் ஆட்டுக்காலை சுத்தம் செய்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து ஆறிலிருந்து ஏழு விசில் விடவும்.
- 3
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை இரண்டு பெரிய வெங்காயத்தை நறுக்கி சேர்த்து வதக்கவும்.பின்பு தக்காளியை நறுக்கி அதில் சேர்த்து வதக்கி வேகவைத்த ஆட்டுக்கால் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் மல்லித்தூள் சேர்க்கவும்.
- 4
ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் பொட்டுகடலை சோம்பு கசகசா சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
- 5
அரைத்து வைத்த தேங்காய் விழுதை ஆட்டுக்கால் சீர்த்த கடாயில் ஊற்றி பத்து நிமிடம் கொதி விடவும்.பிறகு கொத்தமல்லி தூவி இறக்கவும் இப்போது சுவையான ஆட்டுக்கால் பாயா தயார்.இந்த ஆட்டுக்கால் பாயா இடியாப்பத்தை சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்
Keywords
Similar Recipes
More Recipes











கமெண்ட்