திண்டுக்கல் ஸ்பெஷல் தலப்பாகட்டி மட்டன் தம் பிரியாணி

#vattaram
week 3
திண்டுக்கல் என்றாலே நினைவிற்கு வரும் அளவிற்கு மிகவும் புகழ்பெற்ற ருசியான திண்டுக்கல் ஸ்பெஷல் தலப்பாகட்டி மட்டன் தம் பிரியாணி
திண்டுக்கல் ஸ்பெஷல் தலப்பாகட்டி மட்டன் தம் பிரியாணி
#vattaram
week 3
திண்டுக்கல் என்றாலே நினைவிற்கு வரும் அளவிற்கு மிகவும் புகழ்பெற்ற ருசியான திண்டுக்கல் ஸ்பெஷல் தலப்பாகட்டி மட்டன் தம் பிரியாணி
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பிரியாணி மசாலா தயாரிப்பதற்காக 3 சிறிய துண்டு பட்டை 4 கிராம்பு 3 ஏலக்காய் ஆகியவற்றை மிதமான தீயில் கருக விடாமல் லேசாக வறுத்து பின்பு ஆற வைத்து அரைத்துக் கொள்ள வேண்டும்
- 2
அரைக்கிலோ மட்டனை எடுத்து இரண்டு முறை தண்ணீரில் நன்கு கழுவி எடுத்து கொள்ள வேண்டும்
- 3
முதலில் மட்டனை வேக வைக்க குக்கரில் 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்தவுடன் அதில் 2 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கி பிறகு அதில் மட்டன் துண்டுகளை சேர்த்து அதற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்
- 4
மட்டன் வதங்கியவுடன் அதில் 3 டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி விடவும்
- 5
குக்கரில் மூன்று விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விட வேண்டும் பின்பு குக்கரில் ஆவி அடங்கியவுடன் குக்கரை திறந்து மட்டன் தனியாகவும் மீதமுள்ள அதன் தண்ணீரை தனியாகவும் பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும் அதிலிருக்கும் தண்ணீரை நாம் பிரியாணி செய்யும் பொழுது பயன்படுத்திக் கொள்ளலாம்
- 6
மூன்று டம்ளர் சீரக சம்பா அரிசியை எடுத்து ஒரு முறை தண்ணீரில் அலசிவிட்டு அரிசி இலேசாக முழுகும் வரை தண்ணீர் சேர்த்து 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்
- 7
இப்பொழுது பிரியாணி செய்வதற்கு 20 தோலுரித்த சின்ன வெங்காயம் 7 டேபிள்ஸ்பூன் நெய் இரண்டு சிறிய துண்டு பட்டை 2 கிராம்பு 2 ஏலக்காய் 2 பிரியாணி இலை 6 முந்திரி 3 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது நாலு டேபிள்ஸ்பூன் அதிகம் புளிப்பில்லாத தயிர் ஒரு கையளவு கொத்தமல்லித்தழை ஒரு கை அளவு புதினா இலை ஒரு டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள் 2 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் இவற்றுடன் நாம் அரைத்து வைத்துள்ள பிரியாணி மசாலா 1 டேபிள்ஸ்பூன் ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்
- 8
பிரியாணி தாளிப்பதற்கு பிரியாணி பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் 7 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி நெய் காய்ந்தபின் அதில் பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை மற்றும் முந்திரிப் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்
- 9
பின்பு ஒரு கையளவு புதினா இலை ஒரு கையளவு கொத்துமல்லி இலையை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கிய பின்பு சின்ன வெங்காயத்தை சேர்த்து அதனையும் நன்கு வதக்க வேண்டும்
- 10
சின்ன வெங்காயம் நன்கு வதங்கியவுடன் அதில் 3 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்
- 11
பிறகு நாம் வேகவைத்து எடுத்து வைத்துள்ள மட்டன் துண்டுகளை சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்க வேண்டும் மட்டன் வதங்கிய பிறகு அதில் நாம் தயாரித்து வைத்துள்ள பிரியாணி மசாலா 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் 2 டேபிள் ஸ்பூன் மிளகாய்த் தூள் ஆகியவற்றையும் சேர்த்து மிதமான தீயில் கருக விடாமல் நன்கு வதக்க வேண்டும்
- 12
மசாலாவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்
- 13
மசாலா வதங்கிய பிறகு அதில் நாம் எடுத்து வைத்துள்ள 4 டேபிள்ஸ்பூன் அதிகம் புளிப்பில்லாத தயிரை சேர்த்து வதக்க வேண்டும்
- 14
பின்னர் நாம் எந்த டம்ளரில் அரிசி அளந்து எடுத்துக் கொண்டோமோ அதே டம்ளரில் ஆறு டம்ளர் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும் நாம் மட்டனை முன்னதாகவே வேக வைத்து விட்டதால் ஒரு டம்ளர் அரிசிக்கு 2 டம்ளர் தண்ணீர் விகிதம் சரியாக இருக்கும் நாம் அதற்கு மட்டன் வேக வைத்த தண்ணீரையும் பயன்படுத்தலாம் எனவே மசாலா நன்கு வெந்தவுடன் ஆறு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்
- 15
மசாலாவுடன் சேர்த்த தண்ணீரில் நன்கு கொதி வந்தவுடன் நாம் ஏற்கனவே தண்ணீரில் ஊற வைத்துள்ள மூன்று டம்ளர் பிரியாணி அரிசியை தண்ணீர் முழுவதும் வடிகட்டி விட்டு கொதிக்கும் மசாலா தண்ணீரில் சேர்த்து நன்கு கிளற வேண்டும்
- 16
ஐந்து நிமிடம் சென்றவுடன் பார்த்தால் நாம் சேர்த்த பிரியாணி அரிசி பாதி அளவு வெந்திருக்கும் அந்த சமயத்தில் மேலும் சிறு கையளவு பொதினா கொத்தமல்லி இலைகளை அதனுடன் சேர்க்க வேண்டும்
- 17
பிறகு அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு பிரியாணி பாத்திரத்தை அடுப்பிலிருந்து எடுத்து விட்டு அடுப்பின் மேல் தோசைக்கல்லை வைத்து அதன் மேல் பிரியாணி பாத்திரத்தை வைத்து நன்கு மூடி விடவேண்டும் மூடியின் மேல் ஏதாவது ஒரு கனமான பொருளை வைக்க வேண்டும் அடுப்பை குறைந்த அளவு சூட்டில் அதாவது சிம்மில் 10 நிமிடம் வைக்க வேண்டும்
- 18
பிறகு பாத்திரத்தை திறந்து பார்த்து ஒரு முறை கிளறி விட வேண்டும் இப்பொழுது அரிசி முக்கால் பாகம் வெந்து இருக்கும் கிளறிவிட்டு மறுபடியும் அதே போல் மூடி வைத்து மூடி மேலே கனமான பாத்திரத்தை வைத்து மேலும் ஒரு பத்து நிமிடம் வேக வைக்க வேண்டும்
- 19
பத்து நிமிடம் கழித்து அடுப்பை அனைத்து விட்டு பிரியாணி பாத்திரத்தை அடுப்பில் இருந்து எடுக்காமல் அப்படியே ஒரு ஐந்து நிமிடம் விட்டுவிட வேண்டும் 5 நிமிடம் கழித்து திறந்து பாருங்கள் இதோ மட்டனுடன் மசாலா கலவைகளும் சேர்த்து கமகமக்கும் அசத்தலான திண்டுக்கல் ஸ்பெஷல் தலப்பாகட்டி மட்டன் தம் பிரியாணி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஆம்பூர் மட்டன் தம் பிரியாணி
#vattaram #week8ஆம்பூர் என்றாலே மட்டன் பிரியாணி பிரபலமானது. இதை நான் செய்து பார்த்து உங்களுடன் பகிர்ந்துள்ளேன். சுவை அட்டகாசமாக இருந்தது. Asma Parveen -
-
கேரளா ஸ்பெஷல் மலபார் சிக்கன் பிரியாணி (Malabar Chicken Biryani Recipe in tamil)
#பிரியாணி#goldenapron3#week 3 Nandu’s Kitchen -
-
மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
#cookpadturns6பிரியாணி இல்லாத ஒரு பிறந்தநாளா இதோ டேஸ்டான மட்டன் தம் பிரியாணி விறகு அடுப்பில் செய்தது Sudharani // OS KITCHEN -
திண்டுக்கல் தலப்பாக்கட்டி மட்டன் பிரியாணி
#np1திண்டுக்கல் மட்டன் பிரியாணி தென்னிந்தியாவின் பிரபலமான பிரியாணிகளில் ஒன்று. இதில் கையால் தயாரிக்கப்பட்ட பிரியாணி மசாலாவைச் சேர்ப்போம், இது பிரியாணிக்கு நல்ல சுவையைத் தருகிறது. உண்மையான சுவை பெற சீராகா சம்பா அரிசியைப் பயன்படுத்தி இந்த பிரியாணியை உருவாக்கவும். வீட்டில் உணவக பாணியில் தலப்பாக்கட்டி பிரியாணியைத் தயாரிக்க,கீழே உள்ள பதிவை பார்க்கவும். Swathi Emaya -
காளான் பன்னீர் தம் பிரியாணி
#NP1 சீரக சம்பா அரிசியில் செய்யப்படும் இந்த தம் பிரியாணி மிகவும் ருசியாக இருக்கும் Cookingf4 u subarna -
மட்டன் பிரியாணி
#cookwithfriends #thulasi #ilovecooking மட்டன் பிரியாணி தயார் செய்ய இளம் ஆட்டுக் கறியைத் தேர்வு செய்யவும்veni sridhar
-
பாஸ்மதி மட்டன் பிரியாணி (Type2)
#combo3 அரிசி உடையாமல், உதிரி உதிரியான, ருசியான பாஸ்மதி மட்டன் பிரியாணி செய்முறை. இதற்கு மட்டன் எலும்பு தாளிச்சா சேர்த்து சாப்பிட்டால் ருசி அபாரமாக இருக்கும் Laxmi Kailash -
திண்டுக்கல் மட்டன் பிரியாணி (Dindukal mutton biryani recipe in tamil)
#GA4Week3Mutton Manjula Sivakumar -
-
-
-
கோவை மட்டன் பிரியாணி (Kovai mutton biryani recipe in tamil)
இந்த மட்டன் பிரியாணி புதிய சுவையில் இருக்கும். மசாலா பொருட்களையும் அரைத்து சேர்ப்பது மிகவும் மணமாகவும் காரசாரமான முறையில் ருசியாகவும் இருக்கும். Lakshmi -
-
ஆம்பூர் தம் பிரியாணி (Ambur Dum Biryani)
ஆம்பூர் தம் பிரியாணி சைவம்,அசைவம் இரண்டிலும் செய்யலாம்.நான் இங்கு காய்கறிகளை வைத்துத்தான் செய்துள்ளேன். சுவை மிகவும் அருமையாக இருந்தது.#Vattaram Renukabala -
செட்டிநாடு மட்டன் சுக்கா கிரேவி
#kavithaபிரியாணி, பரோட்டா, தயிர்சாதம், சாம்பார்சாதம், நெய் சோறு, வகை சாப்பாடு ஆகிய எல்லாவற்றிற்கும் பொருத்தமான மட்டன் சுக்கா ரெசிபி செட்டிநாடு முறையில் இங்கு பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஸ்டைல் சீரக சம்பா மட்டன் தம் பிரியாணி
சீரகசம்பா அரிசியானது தமிழ்நாட்டில் மற்றும் ஸ்ரீலங்கா பகுதிகளில் அதிகமாக விளைநிலங்களில் பயிரிடப்படுகிறது. அதனால் சீரக சம்பா அரிசி தமிழகத்தில் பாஸ்மதி அரிசியை விட மிகவும் பிரசித்தி பெற்றது. பாரம்பரியமிக்க திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணியில் இந்த சீரக சம்பா அரிசியை கொண்டு தான் செய்வார்கள். பிரியாணியை பிரியாணி அண்டாவில் விறகு அடுப்பில் தம் போட்டு செய்வது தனி ருசிதான். #salna #biryani Sakarasaathamum_vadakarium -
ஆம்பூர் ஸ்பெஷல் வெஜ் தம் பிரியாணி
#vattaramகார சாரமான வாசனை தூக்கும் ஆம்பூர் ஸ்பெஷல் வெஜ் பிரியாணி, ஆம்பூர் ஸ்பெஷல் ஆனாலும் mogul cuisine ஆதாரம். பல ஸ்பைஸ், பல நிற காய்கறிகள், பல சுவைகள், சத்துக்கள், நாவிர்க்கும், கண்களுக்கும் நல்ல விருந்து. #vattaram Lakshmi Sridharan Ph D -
தேங்காய் பால் ஸ்பெஷல் மட்டன் தம் பிரியாணி (Thenkaai paal special mutton biryani recipe in tamil)
#eid #goldenapron3 அணைத்து இஸ்லாமிய சகோதரா சகோதரிகளுக்கும் எனது இதயம் நிறைந்த ஈகை பெருநாள் நல்வாழ்த்துக்கள்இந்த தம் பிரியாணி ஆனது தேங்காய் பால் சேர்த்து செய்யப்பட்டது Soulful recipes (Shamini Arun) -
-
-
மட்டன் கிரேவி (Mutton gravy recipe in Tamil)
#Wdஎனக்கு அன்பான வாழ்க்கை துணையை பெற்றெடுத்த அத்தைக்கு மகளிர்தின ஸ்பெஷல் மட்டன் கிரேவி Sangaraeswari Sangaran -
மணமணக்கும் மட்டன் வெள்ளை பிரியாணி(FlavourfulMuttonWhiteBiriyani)
#magazine4வித்தியாசமான முறையில், செய்யப்பட்ட மட்டன் வெள்ளை பிரியாணி.. அருமையான மணமும் ருசியும் கொண்டது.. Kanaga Hema😊 -
தலைப்பக்கட்டி ஸ்பெஷல் மட்டன் பிரியாணி (Thalaipakatti special mutton biryani Recipe in Tamil)
#அம்மா #nutrient2 #book #goldenapron3 (மட்டன் வைட்டமின் - B12) அணைத்து அன்னையர்களுக்கும் அன்னையர் தினம் வாழ்த்துக்கள் Soulful recipes (Shamini Arun) -
-
பாய் வீட்டு மட்டன் தம் பிரியாணி
#salnaபிரியாணி செய்யும் பொழுது அரிசியின் அளவுக்கு கூடுதலாக கறி சேர்த்து செய்தால் சுவை அட்டகாசமாக இருக்கும். சமைப்பவருக்கு பொறுமை மிகவும் அவசியம். Asma Parveen -
திண்டுக்கல் சிக்கன் பிரியாணி (Dindukal chicken biryani recipe in tamil)
#homeவீட்டிலேயே மசாலா அரைத்து செய்த சுவையான பிரியாணி Sharanya -
More Recipes
கமெண்ட்