ரேசன் பச்சரிசி சாஃப்ட் இடியாப்பம்

#combo3
ரேஷன் பச்சரிசியில் சூப்பராக இடியாப்ப மாவு தயாரித்து இடியாப்பம் செய்யலாம். மாவு அரைப்பது முதல் இடியாப்பம் செய்வது வரை அனைத்து செய்முறையும் பகிர்ந்துள்ளேன்.
ரேசன் பச்சரிசி சாஃப்ட் இடியாப்பம்
#combo3
ரேஷன் பச்சரிசியில் சூப்பராக இடியாப்ப மாவு தயாரித்து இடியாப்பம் செய்யலாம். மாவு அரைப்பது முதல் இடியாப்பம் செய்வது வரை அனைத்து செய்முறையும் பகிர்ந்துள்ளேன்.
சமையல் குறிப்புகள்
- 1
ரேஷனில் கிடைக்கக்கூடிய பச்சரிசியில் மாவு பச்சரிசி வெண்மையாக இருக்கும். இந்த மாதிரியான பச்சரிசியை கருப்பு அரிசி இல்லாமல் சுத்தம் செய்து தண்ணீரில் கழுவிக் கொள்ளவும். தண்ணீர் சுத்தமாகும் வரை கழுவிக் கொள்ளவும். இதனை வடித்து கொள்ளவும். சூடான வெயிலில் காட்டன் துணியின் மேல் பச்சரிசியை பரப்பி நன்றாக காய வைக்கவும். காய்ந்த அரிசியை மாவு மில்லில் கொடுத்து இடியாப்ப பதத்திற்கு நைஸாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவை வட சட்டியில் சேர்த்து வறுத்து ஆற வைக்கவும். நிறம் மாறாமல் லேசாக வறுக்க வேண்டும்.
- 2
தயார் செய்த மாவில் இருந்து ஒன்றரை கப் மாவை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும் இதில் உப்பு மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். தண்ணீரை படத்தில் காட்டியுள்ளபடி இலேசாக கொதித்து வந்த நிலையில் மாவில் சேர்த்து கலந்து கொடுக்க வேண்டும். மாவை நன்கு உள்ளங் கைகளால் பிசைந்து ஒன்று திரட்டி உருட்டிக் கொள்ள வேண்டும். கிளறிய மாவை கொழுக்கட்டை போல் பிடித்து வைக்கவும். இடியாப்ப அச்சில் எண்ணெய் தடவி மாவை வைக்கவும்.
- 3
எண்ணை தடவிய இடியாப்ப தட்டு அல்லது இட்லி தட்டில் இடியாப்பத்தை பிழிந்து விடவும். இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதி வந்தபின் இடியாப்ப ஸ்டாண்டை வைத்து மூடி போட்டு சரியாக ஐந்து நிமிடங்கள் வேக விடவும்.
- 4
சூப்பரான பஞ்சு போன்ற இடியாப்பம் உதிரி உதிரியாக இருக்கும். இதனை தேங்காய் பால், கறி குழம்பு, ஆட்டுக்கால் சூப், அல்லது ஆட்டுக்கால் பாயா வைத்து சாப்பிட சுவையாக இருக்கும்.
- 5
குறிப்பு: தண்ணீரின் அளவு ஒரு சிலரின் அரிசி மற்றும் மாவின் தன்மையைப் பொறுத்து மாறுபடலாம்.
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes













கமெண்ட்