உருளைக்கிழங்கு வறுவல் (potato fry) 🥔

# pms family அற்புதமான சுவையான உருளைக்கிழங்கு வறுவல் செய்ய முதலில் கடாயில் சமையல் எண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றி சோம்பு, கசகசா, இரண்டு பச்சை மிளகாய், கருவேப்பிலை, இஞ்சி பூண்டு சிறிது, தேங்காய் துருவல் இதை அனைத்தையும் போட்டு எண்ணெயில் நன்கு வதக்கவும். நன்கு வதங்கியதும் ஆறவிட்டு மிக்ஸி ஜாரில் தண்ணீர் ஊற்றாமல் கொரகொரப்பாக அரைக்கவும். பின் கடாயில் 2 டீஸ்பூன் சமையல் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை போட்டு வதக்கவும். பின் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை அதனுடன் சேர்த்து வதக்கவும்.தேவைக்கேற்ப உப்பு,மஞ்சள்தூள் உருளைக்கிழங்கில் சேர்க்கவும்.தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உருளைக்கிழங்கை வேக வைக்கவும். உருளைக்கிழங்கு வெந்தவுடன் அரைத்து வைத்த தேங்காய் கலவையை அதனுடன் சேர்த்து நன்கு வதக்கி விடவும். நன்கு வதங்கியதும் நமது சூப்பரான உருளைக்கிழங்கு வறுவல் தயார்👌👌👍👍

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். உருளைகிழங்கை வெட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
பின் கடாயில் சமையல் எண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றி எண்ணெய் சூடானதும் சோம்பு, கசகசா இரண்டையும் எண்ணையில் போட்டு வதக்கவும்.
- 3
பின் கருவேப்பிலை பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். பின் அதனுடன் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
- 4
இஞ்சி பூண்டு நன்கு வதங்கியவுடன் தேங்காய் துருவலை சேர்த்து வதக்கவும்.
- 5
தேங்காய் துருவலை நன்கு பொன்னிறமாக வறுக்கவும். பின் மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் கொரகொரப்பாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 6
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
- 7
பின் வெட்டி வைத்துள்ள உருளைக்கிழங்கை எண்ணையில் சேர்த்து வதக்கவும். அதனுடன் மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 8
பின் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும்.பின் தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி உருளைக்கிழங்கை மூடி போட்டு வேக விடவும்.
- 9
முடியை நீக்கி உருளைக்கிழங்கு வெந்த பிறகு,சிறிதளவு தண்ணீர் இருக்கும் போதே அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை உருளைக்கிழங்குடன் சேர்க்கவும்.
- 10
3 நிமிடம் கடாயில் உள்ள அனைத்தையும் நன்கு கலந்து விடவும்.
- 11
நமது சுவையான சூப்பரான உருளைக்கிழங்கு வறுவல் தயார்👌👌 வீட்டில் உள்ள அனைவருக்கும் தயிர்சாதம், தாளித்த சாதம் இவை அனைத்துக்கும் சைட் டிஷ் ஆக பரிமாறி மகிழுங்கள்👍👍 நன்றி😊
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட் (6)