பருப்பு உருண்டை குழம்பு

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

இந்த குழம்பு ஒரு பாரம்பரிய குழம்பு காய்கறி எதுவும் இல்லாதபோது இதை செய்தால் இதிலுள்ள உருண்டைகளை தொட்டுக் கொண்டும் குழம்பில் போட்டும் சாப்பிடலாம் சுவையோ டாப்டக்கர்

பருப்பு உருண்டை குழம்பு

இந்த குழம்பு ஒரு பாரம்பரிய குழம்பு காய்கறி எதுவும் இல்லாதபோது இதை செய்தால் இதிலுள்ள உருண்டைகளை தொட்டுக் கொண்டும் குழம்பில் போட்டும் சாப்பிடலாம் சுவையோ டாப்டக்கர்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

3/4மணி
6பேர்
  1. 4டேபிள் ஸ்பூன்க.பருப்பு
  2. 4டேபிள் ஸ்பூன்து.பருப்பு
  3. 2 டேபிள் ஸ்பூன்உ.பருப்பு
  4. 12சி.மிளகாய்
  5. 4ப.மிளகாய்
  6. 1/4கப்நறுக்கின வெங்காயம்
  7. 1 டீஸ்பூன்வெந்தயம்
  8. 1 டீஸ்பூன்து.பருப்பு
  9. 1 டீஸ்பூன்கடுகு
  10. 1புளி எலுமிச்சையளவு
  11. 2மிளகாய்
  12. கல் உப்பு தேவைக்கு
  13. 4டேபிள் ஸ்பூன்நல்லெண்ணெய்
  14. 1ஆர்க்குகறிவேப்பிலை
  15. 1 டீஸ்பூன்ம.தூள்
  16. 2டேபிள் ஸ்பூன்சாம்பார் பொடி
  17. தண்ணீர் ஊறவைக்க

சமையல் குறிப்புகள்

3/4மணி
  1. 1

    க.பருப்பு து.பருப்பு உ.பருப்பு சி.மிளகாய் ப.மிளகாய் அனைத்தையும் 1/2மணி நேரம் வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்துக்கொள்ளவும்

  2. 2

    பிறகு தண்ணீரை வடித்து விட்டு மிக்ஸியில் சிறிது உப்பு போட்டு சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்

  3. 3

    அரைத்ததை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேகவைத்துக் கொள்ளவும்

  4. 4

    புளியை ஊற வைத்து பிறகு கெட்டியாக கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்

  5. 5

    பிறகு கடாயில் நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு வெந்தயம் து.பருப்பு.மிளகாய் தாளிக்கவும். வெங்காயம் போட்டதும் சிறிது உப்பு போடவும்.வதங்கியதும் ம.தூள் கறிவேப்பிலை போடவும்

  6. 6

    புளி கரைசலில் சாம்பார் பொடி உப்பு போடவும்

  7. 7

    புளிக்கரைசலை வதக்கினதில் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்

  8. 8

    கொதித்து புளி வாசனை போனதும் ஆறின உருண்டைகளை போடவும்

  9. 9

    ஒன்று சேர ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும் சுவையான காய்கறி இல்லாத போது கை கொடுக்கும் பருப்பு உருண்டை குழம்பு தயார்.மற்ற நாட்களிலும் இதை செய்து அசத்தலாம்

  10. 10

    கொடுத்துள்ள அளவில் செய்தால் 25 உருண்டைகள் தாராளமாக வரும் அசத்தவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes