உருளைக்கிழங்கு வறுவல் (potato fry) 🥔

# pms family அற்புதமான சுவையான உருளைக்கிழங்கு வறுவல் செய்ய முதலில் கடாயில் சமையல் எண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றி சோம்பு, கசகசா, இரண்டு பச்சை மிளகாய், கருவேப்பிலை, இஞ்சி பூண்டு சிறிது, தேங்காய் துருவல் இதை அனைத்தையும் போட்டு எண்ணெயில் நன்கு வதக்கவும். நன்கு வதங்கியதும் ஆறவிட்டு மிக்ஸி ஜாரில் தண்ணீர் ஊற்றாமல் கொரகொரப்பாக அரைக்கவும். பின் கடாயில் 2 டீஸ்பூன் சமையல் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை போட்டு வதக்கவும். பின் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை அதனுடன் சேர்த்து வதக்கவும்.தேவைக்கேற்ப உப்பு,மஞ்சள்தூள் உருளைக்கிழங்கில் சேர்க்கவும்.தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உருளைக்கிழங்கை வேக வைக்கவும். உருளைக்கிழங்கு வெந்தவுடன் அரைத்து வைத்த தேங்காய் கலவையை அதனுடன் சேர்த்து நன்கு வதக்கி விடவும். நன்கு வதங்கியதும் நமது சூப்பரான உருளைக்கிழங்கு வறுவல் தயார்👌👌👍👍
உருளைக்கிழங்கு வறுவல் (potato fry) 🥔
# pms family அற்புதமான சுவையான உருளைக்கிழங்கு வறுவல் செய்ய முதலில் கடாயில் சமையல் எண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றி சோம்பு, கசகசா, இரண்டு பச்சை மிளகாய், கருவேப்பிலை, இஞ்சி பூண்டு சிறிது, தேங்காய் துருவல் இதை அனைத்தையும் போட்டு எண்ணெயில் நன்கு வதக்கவும். நன்கு வதங்கியதும் ஆறவிட்டு மிக்ஸி ஜாரில் தண்ணீர் ஊற்றாமல் கொரகொரப்பாக அரைக்கவும். பின் கடாயில் 2 டீஸ்பூன் சமையல் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை போட்டு வதக்கவும். பின் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை அதனுடன் சேர்த்து வதக்கவும்.தேவைக்கேற்ப உப்பு,மஞ்சள்தூள் உருளைக்கிழங்கில் சேர்க்கவும்.தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உருளைக்கிழங்கை வேக வைக்கவும். உருளைக்கிழங்கு வெந்தவுடன் அரைத்து வைத்த தேங்காய் கலவையை அதனுடன் சேர்த்து நன்கு வதக்கி விடவும். நன்கு வதங்கியதும் நமது சூப்பரான உருளைக்கிழங்கு வறுவல் தயார்👌👌👍👍
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். உருளைகிழங்கை வெட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
பின் கடாயில் சமையல் எண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றி எண்ணெய் சூடானதும் சோம்பு, கசகசா இரண்டையும் எண்ணையில் போட்டு வதக்கவும்.
- 3
பின் கருவேப்பிலை பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். பின் அதனுடன் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
- 4
இஞ்சி பூண்டு நன்கு வதங்கியவுடன் தேங்காய் துருவலை சேர்த்து வதக்கவும்.
- 5
தேங்காய் துருவலை நன்கு பொன்னிறமாக வறுக்கவும். பின் மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் கொரகொரப்பாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 6
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
- 7
பின் வெட்டி வைத்துள்ள உருளைக்கிழங்கை எண்ணையில் சேர்த்து வதக்கவும். அதனுடன் மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 8
பின் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும்.பின் தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி உருளைக்கிழங்கை மூடி போட்டு வேக விடவும்.
- 9
முடியை நீக்கி உருளைக்கிழங்கு வெந்த பிறகு,சிறிதளவு தண்ணீர் இருக்கும் போதே அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை உருளைக்கிழங்குடன் சேர்க்கவும்.
- 10
3 நிமிடம் கடாயில் உள்ள அனைத்தையும் நன்கு கலந்து விடவும்.
- 11
நமது சுவையான சூப்பரான உருளைக்கிழங்கு வறுவல் தயார்👌👌 வீட்டில் உள்ள அனைவருக்கும் தயிர்சாதம், தாளித்த சாதம் இவை அனைத்துக்கும் சைட் டிஷ் ஆக பரிமாறி மகிழுங்கள்👍👍 நன்றி😊
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
"ஸ்பைஸி உருளைக்கிழங்கு வறுவல்" Spicy Potato Fry recipe in tamil
#Kilangu#Week-2#வாரம்-2#கிழங்கு#ஸ்பைஸி உருளைக் கிழங்கு வறுவல்.##CookpadIndia#குக்பேட்இந்தியா Jenees Arshad -
உருளைகிழங்கு வறுவல்
#pmsfamilyசோம்பு கசகசா பச்சை மிளகாய் தேங்காய் இஞ்சி பூண்டு அனைத்தும் கடாயில் போட்டு வதக்கி மஞ்சள் பொடி சேர்த்து அரைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு கறிவேப்பிள்ளை சேர்த்து உருளை கிழங்கு சேர்த்து வேக விடவும் தேவையான நீர் உப்பு சேர்க்கவும் .பிறகு அரைத்த மசால் கலவையை சேர்க்கவும். உருளை கிழங்கு வறுவல் தயார்😊👍 Anitha Pranow -
சோயா மிளகு வறுவல்(Meal maker pepper fry)👌👌
#pms family மிகவும் சுவையான அற்புதமான குழந்தைகள் விரும்பும் சோயா மிளகு வறுவல் செய்ய முதலில் நமக்கு தேவையான சோயாவை சுடு நீரில் போட்டு 1/2 மணி நேரம் ஊற வைத்து விட்டு,பின் அதில் உள்ள தண்ணிரை நன்றாக வாசம் போக பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின் கடாயில் சமயல் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிது சோம்பு,சீரகம் சேர்த்து பின் வர மிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து எண்ணெயில் வதக்கவும்,பின் அதனுடன் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம்,தக்காளி,இஞ்சி பூண்டு பேஸ்ட் அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கி விட்டு பின் அதனுடன் 50 கிராம் சோயா(meal maker) சேர்த்து வதக்கி பின் அதனுடன் கரம் மசாலா,மல்லி தூள்,மிளகாய் தூள்,உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி தண்ணீரை ஊற்றி மூடி போட்டு வேக வைக்கவும்..பின் சோயா கலவைகளுடன் பச்சை வாசம் போன பின் பெப்பர்(pepper) பொடி நன்றாக தூவி அதனுடன் தேங்காய் துருவல், ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி , கொத்துமல்லி இலை சேர்த்து கிளறி விட வேண்டும்... அற்புதமான வாசனையுடன் சோயா மிளகு வறுவல் தயார், இதனை தயிர் சாதம்,சாம்பார் சாதம் போன்றவற்றிற்கு தொட்டு சாப்பிட நன்றாக இருக்கும்.👍👍 Bhanu Vasu -
கும்பகோணம் கடப்பா(kumbakonam kadappa recipe)👌👌
#pms family உடன் இணைந்து ருசியான கும்பகோணம் கடப்பா செய்ய முதலில் பாசிப்பருப்பு, உருளைக்கிழங்கை வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.கடாயில் சமயல் எண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றி சூடானதும் கடுகு உளுந்து,சீரகம்,கிராம்பு, பட்டை போட்டு வதக்கவும்,பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயம்,கருவேப்பிலை, தக்காளி,உப்பு,மஞ்சள் தூள் போட்டு நன்கு வதக்கவும்,பின் தேங்காய்,கசகசா,சோம்பு, பச்சை மிளகாய், பொட்டு கடலை ஆகியவற்றை ஒன்றாக அரைத்து வைத்து கொள்ளவும். உருளைக்கிழங்கை தோள் நீக்கி மசித்து வைத்துக் கொள்ளவும்.பின் கடாயில் இருக்கும் தக்காளி வெங்காயம் வதங்கியதும் பாசிப்பருப்பு, உருளைக்கிழங்கு, அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவை அனைத்தையும் போட்டு பச்சை வாசனை போக வதக்கி தேவையான தண்ணீர் ஊற்றி கொதி விட்டு மல்லி இலை தூவி இறக்கவும்.ருசியான கும்பகோணம் கடப்பா தயார்👍 Bhanu Vasu -
கத்திரிக்காய் முருங்கைக்காய் உருளைக்கிழங்கு புளி குழம்பு🍆🥔👌👌👌👌
#pms family ருசியான அருமையான சுவைமிக்க புளி குழம்பு செய்ய நம் உடலுக்கு நன்மை தரும் ருசியை கூட்டும் மண் சட்டியில் செய்யலாம். மண் சட்டியை அடுப்பில் வைத்து சமயல் நல்யெண்ணையை மண் சட்டியில் உற்றி எண்ணெய் சூடானதும் கடுகு ஊழுந்து போட்டு பொரிந்தவுடன் வெந்தயம் எண்ணெயில் சேர்த்து வதக்கவும்.பின் கறிவேப்பிலை, பச்சைமிளகாய்,நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு,தக்காளி இவை அனைத்தையும் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கவும்.பின் இவைகளுடன் வெட்டி வைத்துள்ள முருங்கைக்காய், கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, மஞ்சள்தூள்,உப்பு,குழம்பு மிளகாய் பொடி சேர்த்து நன்கு கிளறி விட்டு வனங்கியாவுடன் அதனுடன் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேக வைக்கவும். காய்கள் அனைத்தும் வெந்தவுடன் கரைத்து வைத்துள்ள ஒரு எலுமிச்சம் பழம் அளவு புளி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும், பின் அதனுடன் சிறிது நாட்டு சர்க்கரை (அல்லது) சிறிது வெல்லம் சேர்த்து கடைசியாக 1 டீஸ்பூன் நல்யெண்ணை சேர்த்து மல்லி இலை தூவி இறக்கவும்,நமது சூப்பரான புளி குழம்பு தயார்👍👍 Bhanu Vasu -
சுவையான தக்காளி சாம்பார்🍅🍅🍅🍅
#colours1 இட்லிக்கு அருமையான தக்காளி சாம்பார் செய்ய முதலில் மிக்சி ஜாரில் பொட்டுக்கடலை தேங்காய், சீரகம் ,சோம்பு மிளகு,பூண்டு,வர மிளகாய், தக்காளி அனைத்தையும் பச்சையாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, பட்டை, அன்னாசி மொக்கு, நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய்,மஞ்சள் தூள், உப்பு அனைத்தையும் நன்கு வதக்க வேண்டும். பின் அரைத்து வைத்துள்ள தேங்காய் பொட்டுக்கடலை கலவையை கடாயில் ஊற்றி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.பச்சை வாசனை போனதும் நமது சுவையான தக்காளி சாம்பார் ரெடி👍👍 Bhanu Vasu -
தேங்காய் பால் குழம்பு🥥(coconut milk kulambum)🌿🍆🥔🥕🌶️🍀👌👌
#pms family வயிற்றுப் புண்ணை ஆற்றும் சக்தி கொண்ட அற்புதமான சுவையான தேங்காய் பால் குழம்பு செய்ய முதலில் அரை மூடி தேங்காயை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.பின் அரைத்த தேங்காயை நன்கு பிழிந்து தேங்காய் பால் கெட்டியாக எடுத்துக் கொள்ளவும்.பின் அரைத்த தேங்காயை மறுபடியும் தண்ணீரை ஊற்றி அரைத்து பிழிந்து தேங்காய் பால் எடுத்துக் வைத்துக் கொள்ளவும். பின் கடாயில் 2 ஸ்பூன் சமையல் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு,சோம்பு, சீரகம் பிரியாணி இலை, ஏலக்காய் ஒன்று எண்ணெயில் போடவும்.பின் அதனுடன் பச்சை மிளகாய், வெங்காயம், பூண்டு, தக்காளி அனைத்தையும் சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போன பின் அதனுடன் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து வதக்கவும். இதனுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்க்கவும். இப்பொழுது தண்ணீர் ஊற்றி இரண்டாவதாக அரைத்த எடுத்து வைத்துள்ள தேங்காய் பாலை இதனுடன் ஊற்றி சேர்க்கவும். கடாயை மூடி போட்டு காய்களை வேக விடவும்.காய்கள் வெந்தவுடன் இதனுடன் முதலாவதாக அரைத்து வைத்த கெட்டியான தேங்காய் பாலை சேர்க்கவும். அடுப்பை சிம்மில் வைத்து ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை நிறுத்தவும். கொத்தமல்லி கறிவேப்பிலை தூவி இறக்கவும்.நமது சுவையான தேங்காய்ப்பால் குழம்பு தயார்👌👌 Bhanu Vasu -
சத்துமிகு உருளை கிழங்கு வறுவல் 👌🥔🥔
#pms family உருளைகிழங்கு வறுவல் செய்ய கடாயில் ஆயில் சிறிது ஊற்றி சோம்பு கசகசா இஞ்சி பூண்டு பச்சமிளகாய் தேங்காய்துருவல் சேர்த்து வறுத்து கொள்ளவும் ஆறியவுடன் மிக்சியில் தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைக்க வேண்டும் தேவைப்பட்டால் மஞசள் சிறிது சேர்த்து கொள்ளலாம்பிறகு கடாயில் ஆயில் ஊற்றி கடுகு உழுந்து தாளித்து கறிவேப்பிலை சேர்த்து நறுக்கிய உருளை கிழங்கு உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைத்து வெந்தவுடன் அரைத்த பவுடர் கலந்து லேசான தீயில் இரண்டு நிமிடம் கிளறி இறக்கினால் டேஸ்டியான உருளை கிழங்கு வறுவல் தயார் Kalavathi Jayabal -
காலிஃப்ளவர் பச்சை பட்டாணி மசாலா(cauliflower green peas masala)👌👌
#pms family உடன் இணைந்து அருமையான சுவையான காலிஃப்ளவர் பட்டாணி மசாலா செய்ய ஒரு காலிஃப்ளவரை மஞ்சள் தூள் போட்டு நீரில் வேகவைத்துக் கொள்ளவும்.பின் கடாயில் சமயல் எண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றி பட்டை,கிராம்பு,சோம்பு,சீரகம்,பிரியாணி இலை எண்ணெயில் போட்டு வதக்கவும்.பின் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம்,கறிவேப்பிலை, தக்காளி,இஞ்சி பூண்டு பேஸ்ட்,கரம் மசாலா,மிளகாய் பொடி,சீரக தூள்,மல்லித்தூள்,மிளகு பொடி அனைத்தையும் போட்டு வதக்கவும்.பின் அரைத்து வைத்துள்ள தேங்காய், முந்திரி பருப்பு கலவை,உப்பு,பட்டாணி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக வைக்கவும்.பின் வேகவைத்துள்ள காலிஃப்ளவரை அதனுடன் சேர்த்து நன்கு வதக்கி கொத்துமல்லி இலை தூவி இறக்கவும். காலிஃப்ளவர் பட்டாணி மசாலா தயார்👍👍 Bhanu Vasu -
எலுமிச்சை அவல் உப்புமா(lemon aval)🍋
#pms family குழந்தைகளும் பெரியவர்களும் விரும்பும் இரும்பு சத்து நிறைந்த எலுமிச்சை அவல் உப்புமா செய்ய முதலில் 200 கிராம் அவல் எடுத்து தண்ணீர் தெளித்து 1/4 மணி நேரம் ஊற வைக்கவும்.எலுமிச்சைஅரை பழத்தை பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின் கடாயில் சமையல் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,உளுந்து,கடலை பருப்பு எண்ணெயில் போட்டு தாளித்து பிறகு வரமிளகாய்,பச்சை மிளகாய்,கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும் பின் அதனுடன் முந்திரி அல்லது வேர் கடலை சேர்த்து கிளறி விடவும்.பின் பிழிந்து வைத்துள்ள அரை எலுமிச்சை பழம் சாற்றை ஊற்றி உப்பு, மஞ்சள் தூள் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து கிளறி விடவும் பின் அதனுடன் ஊற வைத்துள்ள அவள் சேர்த்து கிளறி விட்டு கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்..சூப்பரான சுவைமிக்க எலுமிச்சை அவல் உப்புமா தயார்.👌👌 Bhanu Vasu -
பச்சைபயிர் மிளகு ரசம்🥗
#refresh1 புத்துணர்ச்சி ஊட்டும் அருமையான பச்சை பயிர் மிளகு ரசம் செய்ய முதலில் தேவையான அளவு பச்சை பயிரை ஒரு பாத்திரத்தில் எடுத்து அடுப்பில் 15 நிமிடம் வேகவைத்து அதனுடன் 1 தக்காளி சேர்த்து வெந்தவுடன் பச்சைப் பயிர் தண்ணீரை எடுத்து வைத்துக் கொள்ளவும்.புளி ஒரு எலுமிச்சை அளவு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து , அதனுடன் ஒரு பச்சைத் தக்காளி கரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும் பின் மிளகு, சீரகம், கொத்தமல்லி, பூண்டு, கறிவேப்பிலை, வரமிளகாய், அனைத்தையும் கடாயில் எண்ணெய் ஊற்றாமல் வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின் அதை மிக்ஸியில் ஜாரில் தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். கடாயை வைத்து இரண்டு ஸ்பூன் சமையல் எண்ணெய் ஊற்றி, சூடானதும் கடுகு, சிறிய பெருங்காயம் கட்டி, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பின் கரைத்து எடுத்து வைத்துள்ள புளி தக்காளி கலவையை கடாயில் ஊற்றவும். பின் கொரகொரப்பாக அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி ,மிளகு கலவைகளை அதனுடன் சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து ஒரு கொதி விட்டு கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கவும்.👍👍 சூப்பரான பச்சைப் பயிறு மிளகு ரசம் தயார்👌👌👌👌 Bhanu Vasu -
தக்காளி மிளகு ரசம்🍅🍅☘️☘️👌👌
#refresh1அருமையான ருசியான புத்துணர்ச்சி ஊட்டக்கூடிய தக்காளி ரசம் செய்ய முதலில் ஒரு நெல்லிக்காய் அளவு புளியை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் கொத்துமல்லி, சீரகம், மிளகு, கறிவேப்பிலை,வரமிளகாய், பூண்டு பற்கள், தக்காளி, அனைத்தையும் ஒன்றாக பச்சையாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு,சிறிய பெருங்காயம் கட்டி, கறிவேப்பிலை,போட்டு பொறிய விட வேண்டும்.பின் அரைத்து வைத்த தக்காளி கலவையை கடாயில் ஊற்றி எண்ணெயில் ஒரு வதக்கு வதக்கி விட வேண்டும். பின் கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை அதனுடன் சேர்த்து கலந்து விட வேண்டும். பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும். அதனுடன் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து தக்காளி ரசம் நுரை கட்டும் வரை அடுப்பில் விடவும். நுரை கட்டியவுடன் கொத்துமல்லி இலைகளை தூவி இறக்க வேண்டும். நமது தக்காளி ரசம் தயார்👍👍 Bhanu Vasu -
உருளைக்கிழங்கு ரப்
உருளைக்கிழங்கு உணவு மிகவும் நல்லது உடம்பிற்கு அதுமட்டுமில்லாமல் இந்த ரப்பை கோதுமையில் செய்வதால் உடம்புக்கு மிகவும் நல்லது எப்படி செய்யலாம்னு செய்முறை பார்க்கலாம் வாங்க.#book Akzara's healthy kitchen -
தக்காளி பச்சடி (Tomato gravy)🍅☘️🍅☘️🍅☘️👌👌👌
#kavithaருசியான சூப்பரான தக்காளி பச்சடி செய்ய முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கடலைப்பருப்பு,சீரகம், பூண்டு, காய்ந்த மிளகாய், போட்டு தாளிக்கவும். நன்கு வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் தக்காளியை சேர்த்து வதக்கவும். பின் தேவைக்கேற்ப மஞ்சள்தூள், உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தக்காளியை வேக விடவும். தக்காளி வெந்ததும் நமது ருசியான சுவையான சப்பாத்தி, தோசை, இட்லிக்கு தக்காளி பச்சடி தயார்👍 Bhanu Vasu -
உருளை கிழங்கு மசாலா கிரேவி (potato masala gravy)👌👌
#pms family அருமையான ருசியான சுவைமிக்க உருளை கிழங்கு பட்டாணி மசாலா கிரேவி செய்ய கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறிது கடுகு,சீரகம்,பெருங்காய தூள் சேர்த்து பொரிந்ததும் அதனுடன் கீரின பச்சை மிளகாயும்,கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்,பின்னர் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை அதனுடன் சேர்த்து அளவாக வதக்காகவும்,பின் பச்சை பட்டாணி,மஞ்சள் தூள் அதனுடன் சேர்த்து நன்கு வதக்கவும்,வந்தங்கியவுடன் அதனுடன் சிறிது மல்லி தூள்,கரம் மசாலா, வர மிளகாய் பொடி,உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்,பின் வேக வைத்து எடுத்து மசித்து வைத்துள்ள உருளை கிழங்கை அதனுடன் சேர்த்து நன்கு வதக்கி தேவையான அளவு தண்ணீரை ஊற்றி மசாலா பச்சை வாசனை போக மூடி போட்டு ஒரு கொதி விட்டு மல்லி இலை தூவி இறக்கி விட வேண்டும்.... சப்பாத்தி,பூரி போன்றவைகளுக்கு சுவையான உருளை கிழங்கு பட்டாணி மசாலா கிரேவி தயார். Bhanu Vasu -
☘️கொத்தமல்லி சட்னி☘️👌
#pms family அற்புதமான சுவையான கொத்தமல்லி சட்னி செய்ய முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு வறுக்கவும். பின் அதனுடன் பூண்டு, சிறிய வெங்காயம் பச்சை மிளகாய்,சிறிய அளவு புளி சேர்த்து வதக்கவும். வதங்கிய பின் அதனுடன் தேங்காய் சிறிய துண்டுகளை சேர்த்து வதக்கவும்.பின் அதனுடன் ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி இலைகளை சேர்த்து ஒரு வதக்கு வதக்கவும். வணங்கியதை ஆற விட்ட பின் அதனுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும். அரைத்ததும் தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் போட்டு தாளிக்கவும். தாளித்ததை எடுத்து அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி சட்னியில் ஊற்றவும். நமது சுவையான கொத்தமல்லி சட்னி தயார்👍👍 Bhanu Vasu -
சுவையான மட்டன் கிரேவி(mutton gravy)🍗🍗👌👌
#kavithaருசியான மட்டன் கிரேவி🍖🍖 செய்ய முதலில் குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை,சோம்பு, கிராம்பு,பிரிஞ்சி இலை, ஏலக்காய்,கறிவேப்பிலை, பச்சை மிளகாய், பெரிய வெங்காயம்,தக்காளி அனைத்தையும் நன்கு வதக்கி கொள்ளவும். பின் அதனுடன் இஞ்சி,பூண்டு, சிறிய வெங்காயம் பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கிய பின் அதனுடன் மட்டன் சேர்த்து வதக்கி விடவும். பின் கரம் மசாலா,குழம்பு மசாலா தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு வதக்கி குக்கரை மூடி போட்டு 3 முதல் 4 விசில் விட்டு இறக்கவும். நமது சுவையான மட்டன் கிரேவி தயார்👍👍 Bhanu Vasu -
வாழைக்காய் வறுவல்(vazhakkai fry)👌👌👌
#pms family அருமையான ருசியான எல்லோரும் விரும்பும் வாழைக்காய் வறுவல் செய்ய முதலில் கொத்துமல்லி,சீரகம்,வரமிளகாய்,கறிவேப்பிலை,துருவிய தேங்காய் அனைத்தையும் எண்ணெயில் நன்றாக வதக்கி கொர கொராப்பாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.பின் கடாயில் சமயல் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,உளுத்தம் பருப்பு,கடலை பருப்பு போட்டு தாளித்து விட்டு பின் நறுக்கி வைத்துள்ள வாழைக்காய்,மஞ்சள் தூள் போட்டு நன்கு எண்ணெயில் வதக்கி விட்டு பின் சிறிது தண்ணீரை தெளித்து விட்டு 5 நிமிடம் வேக விடவும்.வாழைக்காய் வெந்த பிறகு உப்பு தேவையான அளவு தூவி அதனுடன் அரைத்து வைத்துள்ள கொத்துமல்லி,சீரகம், தேங்காய் கலவைகளை போட்டு நன்கு கிளறி விட்டு மல்லி இலைகள் தூவி இறக்க வேண்டும்...ருசியான வாழைக்காய் வறுவல்(vazhakkai fry) தயார்👍👍 Bhanu Vasu -
சீரகம் போட்ட பொரியல் (Seerakam potta poriyal recipe in tamil)
பீன்ஸ் வெங்காயம் வெட்டி கடுகு உளுந்து அரை ஸ்பூன் போட்டு சீரகம் 2 ஸ்பூன் போட்டு வறுத்து வெங்காயம் வதக்கவும். வரமிளகாய் 2ப.மிளகாய்2போட்டு வதக்கவும். பீன்ஸ் வெட்டி போடவும். உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி வதக்கவும். வேகவும் தேங்காய் பூ போடவும். ஒSubbulakshmi -
உருளைக்கிழங்கு அசைவக் குழம்பு (Potato gravy non veg style)
அசைவம் சாப்பிடாத நாட்களில் இந்த முறையில் உருளைக் கிழங்கை வைத்து ஒரு சுவையான உருளைக்கிழங்கு அசைவக்குழம்பு செய்து சுவைக்கலாம்.#YP Renukabala -
-
முருங்கைகாய் உருளைகிழங்கு 🥔கத்தரிக்காய்🍆 புளிகுழம்பு
#PMS Family 🙏முருங்கை காய் கத்தரிக்காய் உருளை கிழங்கு சேர்த்து மணக்கும். புளி குழம்பு செய்ய. முதலில் மண்சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உழுந்து வெந்தயம் தாளித்து நறுக்கிய சின்ன வெங்காயம் பச்சமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கி நறுக்கிய தக்காளி வதக்கி அதோடுநறுக்கிய உருளைகிழங்கு முருங்கைகாய் கத்தரிக்காய் காய்கறிகள் சேர்த்து ஐந்துநிமிடம் லோபிளேமில் மூடி வேக வைத்து பிறகு குழம்பு மிளகாய்தூள்சேர்த்து கிளறி குழம்புக்கு தேவையான தண்ணீர் ஊற்றி உப்பு மஞசள்தூள் சேர்த்து மூடி கொதிக்கவைத்து ஆயில்பிரிந்தவுடன் சிறிய நெல்லிக்காய் அளவு புளிகரைசல் சிறிது நல்லெண்ணெய் விட்டு மூடி ஒருநிமிடம் கழித்து சிறு துண்டு வெல்லம் சேர்த்து இறக்கி சூடாக சுவையாக PM's புளி குழம்பு சாதத்திற்கு சூப்பர் 👌👌👌👌👌 Kalavathi Jayabal -
பருப்பு குழம்பு👌👌
#pms family உடன் சேர்ந்து அருமையான சுவை மிக்க அக்காலம் முதல் இக்காலம் வரை அனைவரும் விரும்பும் துவரம் பருப்பு குழம்பு செய்ய முதலில் துவரம் பருப்பை தண்ணீர் ஊற்றி பாத்திரத்தில் போட்டு அதனுடன் ஒரு தக்காளி, 6 பீஸ் சிறிய வெங்காயம்,1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பருப்பு மசிய வேக விடவும்.பின் மிக்சி ஜாரில் 4 ஸ்பூன் தேங்காய் துருவல்,சீரகம்,வரமிளகாய், சிறிய வெங்காயம் 5 பீஸ் ,பூண்டு இவை அனைத்தையும் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.பருப்பு வெந்தவுடன்,பருப்பை நன்கு கடைந்து விடவும்.பின் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவை ,உப்பு இரண்டையும் பருப்புடன் சேர்த்து நன்கு மூடி போட்டு பச்சை வாசனை போக கொதிக்க விடவும்.பின் பருப்பை தாளிக்க கடுகு உளுந்து,சீரகம் போட்டு பொரிந்ததும் கறிவேப்பிலை,வரமிளகாய் போட்டு தாளிக்கவும். தாளிப்பை பருப்பு குழம்பில் போட்டு கலந்து விட்டு ,பின் கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்.நம் சுவையான பருப்பு குழம்பு தயார்👍👌 Bhanu Vasu -
உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா வறுவல்
#combo4#week4அனைத்து வகையான கலவை சாத வகைகளுக்கும் ஏற்றது உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா வறுவல் Vijayalakshmi Velayutham -
விசேஷங்களில் செய்யும் சேனைகிழங்கு வறுவல் (Senaikilangu VAruval Recipe in Tamil)
சேனைகிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி அதை நீரில் போட்டு கலுவி வடிகட்டி கொள்ளவும்.பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் அதில் சிறிது புளி கரைசல் மஞ்சள் தூள், உப்பு சேர்த்துஅரை பதத்துக்கு வேகவைக்கவும். பிறகு வடிகட்டி கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி அதில். கடுகு, பட்டைமிளகாய் சேர்த்து வெங்காயம், சோம்பு சேர்த்து வதக்கவும் .கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வேகவைத்த சேனை கிழங்கை வடை பொரிப்பது போல் பொரித்து எடுக்கவும்.கடாயில் ஏற்கனவே தாளித்து வைத்தவெங்காயம் உடன் சேர்த்துபிரட்டி பரிமாறவும்.. #chefdeena Yasmeen Mansur -
உருளைக்கிழங்கு மிளகு வறுவல்#GA4
#GA4 உருளைக்கிழங்கு மிளகு வறுவல் கலந்த சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் பொழுது மிகவும் அருமையான சுவையில் இருக்கும். Shalini Prabu -
நாட்டுக்கோழி மிளகு வறுவல்/ Pepper Chicken recipe in Tamil
மிளகு, சோம்பு, கருவேப்பிலை இவைகளை கடாயில் வறுக்கவும். பிறகு அரைத்து பொடி பண்ணி வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது வதக்கி மிளகாய் தூள், அரைத்து பொடி பண்ணியதில் பாதி தூள் சேர்த்து நன்கு வதக்கி அதில் சுத்தம் செய்த கோழியை சேர்த்து வதக்கவும். பிறகு தண்ணீர் சிறிது சேர்த்து உப்பு சேர்த்து கிண்டி குக்கரை மூடவும். குக்கர் விசில் வந்துகுறைவான தீயில் 5நிமிடம். வைத்து குக்கரை திறந்தாள், கம,கம வாசனை யுடன், எண்ணெய் பிரிந்து மிகவும் ருசியான காரசாரமான மிளகு கோழிகறி தயார்#Chef Deena Yasmeen Mansur -
உருளைக்கிழங்கு புட்டு potato puttu recipe in tamil
#kilanguஎன் அம்மா அடிக்கடி செய்யும் உருளைக்கிழங்கு புட்டு எனக்கு மிகவும் பிடிக்கும். காரக்குழம்பு சாதத்துடன் மிகவும் ருசியாக இருக்கும். Nalini Shanmugam -
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு
#pms family அருமையான சுவைமிகுந்த முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு செய்ய கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,வெந்தயம் சேர்த்து பொரிந்ததும் அதனுடன் நறுக்கி வைத்துள்ள சிறிய வெங்காயம்,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்,பின் அதனுடன் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி பின் நறுக்கிய முருங்கைக்காய்,உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும் பின்பு தேவையான அளவு புளி கரைத்த தண்ணீரை ஊற்றி வேக வைத்த பின்புஅரைத்து வைத்துள்ள பூண்டு, தேங்காய்,சீரகம்,குழம்பு மிளகாய் தூள் கலவையை அதனுடன் சேர்த்து நன்கு கலந்து விட்ட பின்பு மூடி போட்டு கொதிக்க விட்டு பச்சை வாசனை போக வேகவிடவும்,நன்கு குழம்புடன் முருங்கைக்காய் வெந்தவுடன் கொத்துமல்லி இலைகள் தூவி இறக்கி விட வேண்டும்.அருமையான சுவை மிகுந்த முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு தயார்.... Bhanu Vasu -
More Recipes
கமெண்ட் (6)