காலிபிளவர் பொடிமாஸ்
#PMS Family
சமையல் குறிப்புகள்
- 1
காலிபிளவர் தண்டுப்பகுதியை எடுத்துவிட்டு சுடுநீரில் போட்டு கழுவி எடுத்து துருவிக் கொள்ளலாம் அல்லது மிக்சி ஜாரில் பல்ஸ் மோடில் போட்டு எடுத்துக் கொள்ளலாம்.
- 2
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து சீரகம் கருவேப்பிலை பச்சை மிளகாய் சின்ன வெங்காயம் துருவிய இஞ்சி சேர்த்து நன்கு வதக்கவும்.இவை வதங்கியதும் துருவிய காலிபிளவர் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.
- 3
காலிஃப்ளவர் வதங்கியதும் கால் டம்ளர் தண்ணீர் தெளித்து விட்டு மூடி போட்டு வேகவிடவும்.காலிபிளவர் வெந்ததும் துருவிய தேங்காய் சேர்த்து நன்கு கலந்து விட்டு இறக்கவும்.இப்போது சுவையான காலிஃப்ளவர் பொடிமாஸ் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15001322






கமெண்ட்