மதுரை ஸ்பெஷல் சிக்கன் சுக்கா (Madurai SPL Chicken Sukka)

#vattaram
🤩கமகமக்கும் மதுரை ஸ்பெஷல் சிக்கன் சுக்கா..😋😋😋 சுண்டி இழுக்கும் சுவையில்.. செய்து பாருங்கள்..🥳
மதுரை ஸ்பெஷல் சிக்கன் சுக்கா (Madurai SPL Chicken Sukka)
#vattaram
🤩கமகமக்கும் மதுரை ஸ்பெஷல் சிக்கன் சுக்கா..😋😋😋 சுண்டி இழுக்கும் சுவையில்.. செய்து பாருங்கள்..🥳
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சிக்கனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும். பிறகு உப்பு, மஞ்சள், மிளகாய், மல்லி, மிளகு தூள்கள் மற்றும் எலுமிச்சை பழச்சாறு சேர்த்து நன்றாக பிரட்டி வைக்கவும்.
- 2
மசாலா தூள்களை சேர்த்து பிசைந்து வைத்த சிக்கனை ஒரு மணி நேரம் வரை ஊற விடவும். பிறகு சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, சோம்பு, சீரகம், தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக அரைத்து வைக்கவும்.
- 3
ஒரு வாணலியில் 5 ஸ்பூன் எண்ணெயை ஊற்றி பிரிஞ்சி இலை, சோம்பு, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, 1 வரமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதக்கி வேக விடவும்.
- 4
முதலில் மசாலா தடவி வைத்த சிக்கனை இதில் சேர்த்து நன்றாக 5 நிமிடங்களுக்கு சுருள வதக்கவும். அரை கப் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து நன்றாக வேக விடவும்.
- 5
தண்ணீர் முழுவதும் சிக்கனில் சேர்ந்து சுருள வந்தவுடன் நன்றாக வதக்கி இறக்கவும். சுவையான மதுரை ஸ்பெஷல் சிக்கன் சுக்கா, அருமையான ருசியில் தயார் 😋😋😋
Keywords
Similar Recipes
More Recipes
















கமெண்ட்